சோழவந்தான் தொகுதி.. மீண்டும் உதிக்கும் உதயசூரியன்? 30 ஆண்டுகளுக்கு பின் நடக்கப் போகும் சம்பவம்!
மதுரை: மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் நகர்ப்புறங்களில் திமுகவும், புறநகரில் அதிமுகவும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ஆனால் புறநகர் தொகுதிகளில் சோழவந்தான் தொகுதியில் மட்டும் திமுக தீவிரமாக பணியாற்றி வருகிறது. தனி தொகுதியான சோழவந்தான் தொகுதியில் மீண்டும் சிட்டிங் எம்எல்ஏ-வான வெங்கடேசனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
2021 சட்டசபைத் தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட்ட வெங்கடேசன் 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் மாணிக்கத்தை வீழ்த்தினார். வாடிப்பட்டி, மதுரை வடக்கு வட்டங்களை தொகுதியான சோழவந்தான் தொகுதியில், பட்டியல் சமூக மக்கள் அதிகளவிலான எண்ணிக்கையில் இருக்கின்றனர். அதேபோல் முக்குலத்தோர் சமூக மக்கள் கணிசமாக வசிக்கின்றனர்.

இதையடுத்து சிறுபான்மை மக்களும், நாடார் சமூக மக்களும் வாழ்கின்றனர். ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பகுதிகள் இந்த தொகுதிக்குள் வருகின்றன. அதற்கேற்ப ஜல்லிக்கட்டு மைதானம் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் விவசாயம் சார்ந்த பகுதி என்பதால், தண்ணீர் வசதிகள் மக்களின் முக்கிய பிரச்சனையாக இருந்து வந்தது.
அதனை திமுக எம்எல்ஏ வெங்கடேசன் பொறுப்புக்கு வந்த உடன் வைகை கூட்டுக் குடிநீர் திட்டம் மூலமாக செய்து கொடுதார். அதேபோல் அரசுப் பள்ளிகளுக்கு கூடுதல் கட்டடங்கள், சாலை வசதிகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் அதிமுக சார்பாக முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர் கடந்த முறையும் இதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்.
இந்த தோல்விக்கு பின் உடனடியாக பாஜக பக்கம் சென்ற அவர், அடுத்த சில மாதங்களிலேயே அதிமுகவுக்கு வந்தார். இருப்பினும் ஆர்பி உதயகுமார் ஆதரவாளர் என்பதால், மீண்டும் எப்படியோ சீட்டை கைப்பற்றிவிட்டார். இதனால் அதிருப்தி அடைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ கருப்பையா தவெக பக்கம் சென்று வேட்பாளராகிவிட்டார். இதன் காரணமாகவே களம் சூடுபிடித்துள்ளது.
கிராமப் பகுதிகளில் தவெகவுக்கு பெரிதாக ஆதரவு இல்லையென்றாலும், சோழவந்தான் பகுதியில் முன்னாள் எம்எல்ஏ கருப்பையாவுக்கு நல்ல ஆதரவு இருக்கிறது. மாணிக்கம் பாஜகவுக்கு தாவியதால், அவர் மீதான நம்பிக்கை அதிமுகவினர் மத்தியிலும் குறைவாகவே உள்ளது. இதனால் அதிருப்தியில் இருக்கும் அதிமுகவினர் தவெக சார்பாக போட்டியிடும் கருப்பையாவுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று பார்க்கப்படுகிறது.
அதேபோல் அமைச்சர் மூர்த்தியின் கட்டுப்பாட்டில் தொகுதி இருப்பதால், முக்குலத்தோர் சமூக வாக்குகளை ஒருங்கிணைத்து சோழவந்தான் தொகுதியை திமுக கைப்பற்றும் என்று தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் திமுக மீதான அதிருப்தி வாக்குகளை தவெக பிரிக்கும் என்பதால், சோழவந்தான் தொகுதியில் மீண்டும் உதயசூரியன் உதிக்கும் என்று தெரிகிறது. 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்த தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ மீண்டும் போட்டியிட்டு வென்றதே இல்லை. அந்த சாதனையை வெங்கடேசன் படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications