மதுரை ரயில் தீவிபத்து: டிராவல்ஸ் ஏஜென்சி மீது வழக்குப் பதிவு.. உரிமையாளரை கைது செய்ய உத்தரவு
மதுரை: மதுரை ரயில் தீவிபத்தில் 10 பேர் தீயில் கருகி பலியான விபத்தை தொடர்ந்து இந்த சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த டிராவல்ஸ் நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவிலிருந்து தமிழகத்திற்கு சுற்றுலா ரயிலில் 65 க்கும் மேற்பட்டவர்கள் வந்தனர். இவர்கள் மதுரை புனலூர் அருகே இணைப்பு பெட்டிக்காக காத்திருந்தனர்.

இந்த இணைப்பு பெட்டி மூலம் சென்னைக்கு செல்லவிருந்தனர். இணைப்பு பெட்டிக்காக காத்திருந்த இந்த பெட்டியில் தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென பரவி குபுகுபுவென எரிந்தது.
இதனால் ரயில் பெட்டிகளில் அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்றனர். தீ அதிகமாக இருந்ததால் அவர்களால் ரயில் பெட்டி அருகே நெருங்கக் கூட முடியவில்லை. இதையடுத்து போலீஸார், தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இதில் 10 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. இந்த தீவிபத்திற்கு சிலிண்டர் வைத்து டீ போட முயற்சித்த போது கேஸ் லீக்காகி தீபிடித்ததே காரணம் என சொல்லப்படுகிறது. பொதுவாக ரயில்களில் எளிதில் தீப்பிடிக்கும் பொருட்கள் எடுத்துச் செல்ல தடை இருக்கும் போது இவர்கள் அடுப்பு, சிலிண்டர், விறகுகளை எப்படி கொண்டு சென்றார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த குழுவினர் தங்களுடன் இரு சமையல்காரர்களை அழைத்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்து குறித்து தகவலறிய இலவச உதவி எண்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சிலிண்டர் கொண்டு வந்தது குறித்து சமையல்காரர் மீதும் டிராவல்ஸ் நிறுவனத்தின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படும் என தகவல்கள் வெளியாகின.
அந்த வகையில் மதுரை ரயில் தீவிபத்து குறித்து சுற்றுலா பயணிகளை சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த தனியார் நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது லக்னோ சீதாப்பூரை சேர்ந்த பேசின் என்ற டிராவல்ஸ் நிறுவனத்தின் மூலம்தான் இவர்கள் உ.பியிலிருந்து தமிழகத்திற்கு சுற்றுலா வந்துள்ளனர். எனவே அந்த நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்ததுடன் அதன் உரிமையாளரை கைது செய்யுமாறு தெற்கு ரயில்வே லக்னோ போலீஸுக்கு உத்தரவிட்டுள்ளது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications