துபாய் செல்ல வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானம் ரத்து.. திடீர் அறிவிப்பால் மதுரையில் பயணிகள் வாக்குவாதம்!
மதுரை: துபாயில் இருந்து மதுரை வரும் ஸ்பைஸ்ஜெட் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது. அந்த விமானம் திரும்பிச் செல்லும்போது அதில் செல்ல இருந்த 168 பயணிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மதுரை விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு ஸ்பைஸ் ஜெட் ஏர்லைன்ஸ் தினமும் விமான சேவை வழங்கி வருகிறது. துபாயில் இருந்து காலையில் புறப்பட்டு மதுரைக்கு வரும் விமானம் மீண்டும் மதுரையில் இருந்து கிளம்பி துபாய் செல்லும்.

மதுரையில் இருந்து இன்று பகல் 12 மணிக்கு துபாய் செல்வதற்காக 70 பயணிகளுடன் புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்பைஸ்ஜெட் விமான நிர்வாகம் அறிவித்தது.
துபாயில் இருந்து மதுரை வரும் ஸ்பைஸ்ஜெட் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பைஸ்ஜெட் நிர்வாகம் முன்னறிவிப்பு எதுவும் கொடுக்காமல், பயணிகள் மதுரை விமான நிலையம் வந்தவுடன் விமான சேவை ரத்து செய்வதாக அறிவித்துள்ளதால் பயணிகள் மிகுந்த அவதி அடைந்துள்ளனர்.
மேலும், ஸ்பைஸ்ஜெட் ஊழியர்களிடம் பயணிகள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். பயணிகளின் வாக்குவாதம் காரணமாக பயணிகளின் பயண திட்டத்தை நாளை அல்லது நாளை மறுநாள் மாற்றம் செய்து தருவதாக உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன்












Click it and Unblock the Notifications