மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வண்டியை நிப்பாட்டு.. ஆன் தி வேயில் மாணவர்களிடம் ஓட்டுக் கேட்ட மு.க.ஸ்டாலின்

Google Oneindia Tamil News

Recommended Video

    கல்லூரி மாணவ மாணவியர்களிடம் திமுக தலைவர் மு க ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்-வீடியோ

    மதுரை: மதுரையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவ மாணவியர்களிடம் திமுக தலைவர் மு க ஸ்டாலின் திடீர் வாக்கு சேகரித்தார்.

    மதுரையில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் மாநகராட்சி ஆணையாளர் தரப்பில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

    Stalin stops his vehicle and meets the college students

    அதன் ஒரு பகுதியாக மதுரை கேகே நகர் சாலையில் அமைந்துள்ள தனியார் கலைக் கல்லூரி மாணவ மாணவியர்கள் வாக்காளர் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வை மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரி நடராஜன் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் சுதாகர் ஆகியோர் கலந்துகொண்டு துவக்கி வைத்தனர்.

    வீதி வீதியாக போகும் ஓபிஎஸ் குடும்பம்.. பணத்தை வாரி இறைக்கும் தங்கம்.. சிவனேன்னு இருக்கும் ஈவிகேஎஸ்! வீதி வீதியாக போகும் ஓபிஎஸ் குடும்பம்.. பணத்தை வாரி இறைக்கும் தங்கம்.. சிவனேன்னு இருக்கும் ஈவிகேஎஸ்!

    இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்திற்காக நேற்று மதுரை வந்தடைந்த தி மு க ஸ்டாலின் இன்று காலை தனியார் விடுதியில் இருந்து சாலை மார்க்கமாக சிவகங்கைக்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது வாக்காளர் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்ட மாணவ மாணவியர்களை சந்திக்க திடீரென வாகனத்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கி மாணவ மாணவியர்களிடம் கைகுலுக்கி வாக்குகளை சேகரித்தார்.

    பின்னர் மாணவர்களுக்கு வணக்கம் தெரிவித்து விட்டு அவர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். ஸ்டாலின் தனது வாகனத்தை விட்டு இறங்கி வந்து ஓட்டு வேட்டையாடியதால் மாணவிகள் குஷியடைந்தனர்.

    English summary
    DMK president MK Stalin stopped his vehicle and met the college students in Madurai and asked them to vote for DMK combine in LS polls.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X