Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜக வாயே திறக்கலயே.. எல்.முருகனும் மவுனம் காப்பது ஏன்? தேஜஸ் ரயில் விவகாரத்தில் சு.வெங்கடேசன் நறுக்

தேஜஸ் ரயிலுக்கு தமிழ் பெயர் மாற்றுவது குறித்து சு வெங்கடேசன் எம்பி கேள்வியெழுப்பியுள்ளார்

Subscribe to Oneindia Tamil

மதுரை: தேஜஸ் ரயில் இனி தாம்பரத்தில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ரயிலின் பெயர் மாற்றம் குறித்து மத்திய அரசு மௌனம் காப்பது ஏன்? என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மத்திய இணையமைச்சர் எல்.முருகனுக்கு கேள்வியெழுப்பியுள்ளார்.

முக்கியமான நகரங்களுக்கு அதிவிரைவாக செல்லும் நோக்கத்திற்காக இயக்கப்பட்டதுதான் 'தேஜஸ்' விரைவு ரயிலாகும். அந்த வகையில் சென்னை எழும்பூரிலிருந்து மதுரைக்கு வாரத்தில் 6 நாட்கள் இந்த ரயில் இயக்கப்படுகிறது. தொடக்கத்தில் எழும்பூருக்கும், மதுரைக்கும் இடையே திருச்சியில் மட்டுமே இந்த ரயில் நின்று செல்வதாக இருந்தது. ஆனால், திண்டுக்கல்லில் பயணிகள் வருகை அதிகம் இருப்பதால் இங்கு ரயில் நின்று செல்ல வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இக்கோரிக்கையை சிபிஎம் எம்பி சு.வெங்கடேசன் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இதனையடுத்து ரயில்வே துறை, தேஜஸ் ரயில் இனி திண்டுக்கல்லிலும் நின்று செல்லும் என்று அறிவித்தது. ஆனாலும், மக்களுக்கு மற்றொரு பிரச்னை இருந்தது. அதாவது சென்னையில் நுழைவு வாயிலாக உள்ள தாம்பரத்தில் எல்லா ரயில்களும் தாம்பரத்தில் நின்று செல்லும் நிலையில், தேஜஸ் நிற்காமலேயே சென்றது.

தாம்பரத்தில் நின்று சென்ற தேஜஸ்

தாம்பரத்தில் நின்று சென்ற தேஜஸ்

எனவே தாம்பரத்திலும் ரயில் நின்று செல்ல வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைக்க தொடங்கினர். இக்கோரிக்கையை திமுக எம்பி டி.ஆர்.பாலுவும், சிபிஎம் எம்.பி. சு.வெங்கடேசனும் வலியுறுத்தினர். நீண்ட நாள் கோரிக்கையையடுத்து சமீபத்தில் இக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படுவதாக ரயில்வேத்துறை அறிவித்தது. அதன்படி இனி தேஜஸ் ரயில் தாம்பரத்தில் நின்று செல்லும் என்றும் கூறியது. இதனையடுத்து நேற்று காலை சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்ட தேஜஸ் ரயில் முதன் முறையாக தாம்பரத்தில் நின்று சென்றது.

பேச மறுத்த திமுக எம்பி டி.ஆர்.பாலு

பேச மறுத்த திமுக எம்பி டி.ஆர்.பாலு

இதற்காக நிகழச்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், திமுக எம்பி டி.ஆர்.பாலு மற்றும் ரயில்வே அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர். பயணிகள் தாம்பரத்திலிருந்து ரயிலில் ஏறிய நிலையில் எல்.முருகன் கொடியதை்து ரயிலை வழியனுப்பி வைத்தார். இந்நிகழ்ச்சியில் டி.ஆர்.பாலு எதுவும் பேசவில்லை. இது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், "நிகழ்ச்சியில் 5 நிமிடங்கள் மட்டுமே பேச வேண்டும் என்று கூறினார்கள். இவ்வளவு குறைவான நேரத்தில், தேஜஸ் ரயில் தாம்பரத்தில் நின்று செல்ல திமுக மேற்கொண்ட முயற்சிகளை முழுமையாக கூற முடியாது. எனவே பேச மறுத்துவிட்டேன்" என்று கூறியிருந்தார்.

சு.வெங்கடேசன் எம்பி கேள்வி

சு.வெங்கடேசன் எம்பி கேள்வி

இது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் சு.வெங்கடேசன் எம்.பி மற்றொரு கேள்வியை எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், "தேஜஸ் அரசியல்: தேஜஸ் எக்ஸ்பிரஸ் தாம்பரத்தில் நிறுத்தப்பட வேண்டுமென்று அந்த தொகுதியின் எம் பி

டி.ஆர்.பாலு தொடர்ந்து வலியிறுத்தினார். மதுரையின் எம்.பியான நான் திண்டுக்கல் மற்றும் தாம்பரத்தில் நிறுத்த இடைவிடாது போராடியுள்ளேன். எங்களின் போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு 'தமிழ்ச்சங்க எக்ஸ்பிரஸ்' என்று பெயர் மாற்ற வேண்டும் என தொடர்ந்து கோரி வருகிறோம்.

தமிழக எம்பிக்கள்

தமிழக எம்பிக்கள்

நேற்று நடந்த விழாவில் ரயிலின் இடைநிறுத்தத்திற்கு கொடியசைக்க வந்த அமைச்சர் எல்.முருகனும், பாஜக அரசும் இது குறித்து மௌனம் காப்பது ஏன்?" என்று கேள்வியெழுப்பியுள்ளார். முன்னதாக ஏற்கெனவே தேஜஸ் ரயிலுக்கு 'தமிழ்ச்சங்க எக்ஸ்பிரஸ்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக எம்பிக்கள் கூட்டாக கையெழுத்திட்டு ரயில்வே அமைச்சகத்திடம் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+