கருப்பு பூஞ்சை:அம்போடேரிசின் பி மருந்தை உடனடியாக மத்திய அரசு இறக்குமதி செய்ய வேண்டும்- சு.வெங்கடேசன்
மதுரை: கருப்பு பூஞ்சை நோய்க்கான லிப்போசோமல் அம்போடேரிசின் பி மருந்தை உடனடியாக மத்திய அரசு இறக்குமதி செய்ய வேண்டும் என்று மதுரை லோக்சபா எம்.பி. சு. வெங்கடேசன் வலியுறுத்தி உள்ளார்.
Recommended Video
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தனுக்கு சு. வெங்கடேசன் எம்.பி. எழுதியுள்ள கடிதம்: நம் நாடு முன் எப்போதும் கண்டிராத அளவில் பல சவால்களை இந்த கோவிட் பெருந்தோற்று நோயினால் கண்டு வருகிறது.
பெருநகரங்களில் தொற்றின் அளவு தற்போது சற்று குறைந்து வந்தாலும் இன்னும் சில சிறிய ஊர்களிலும் கிராமங்களிலும் இந்த தொற்று குறைந்தபாடில்லை. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இன்னும் அதிக அளவில் தான் நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கைகள் இருக்கின்றன.

தாண்டவமாடும் கருப்பு பூஞ்சை
இந்த சவாலை நாம் எதிர்கொண்டு இருக்கும் போதே மற்றுமொரு சவாலாக கருப்பு பூஞ்சை நோய் மக்களிடயே தாண்டவமாட தொடங்கி உள்ளது . தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் இந்த கருப்பு பூஞ்சை நோயின் அதிதீவிரத்தை உணர்ந்து இந்த நோயை அரசுக்கு 'அறிவிக்கப் படவேண்டிய நோயாக' அறிவித்து உள்ளன.

'லிபோசோமல் அம்போடேரிசின் பி' மருந்து
கொரோனா பெருந்தொற்று அளவிற்கு கருப்பு பூஞ்சை நோயாளர்களின் எண்ணிக்கை இல்லாவிடினும் இந்த பூஞ்சையின் வீரியம் மற்றும் நோயின் தீவிரத்தன்மை, நோயாளர்களில் பலருக்கு உயிரிழப்புகளை அதிவிரைவில் ஏற்படுத்திவிடும் அபாயம் உள்ளது. இந்த நோய் குறித்து பல மருத்துவர்களிடம் ஆலோசித்து அதிலும் மரு. வெங்கடேஷ் பிரஜ்னா, மூத்த மருத்துவர், அரவிந்த் கண் மருத்துவமனை மதுரை (உலகின் பெரிய மற்றும் தலைசிறந்த கண்மருத்துவமனை ஆன அரவிந்த் மருத்துவமனையின் ஒரு தலைமை மருத்துவர்) அவர்களிடம் ஆலோசித்த போது இதற்கு தேவையான மருந்து 'லிபோசோமல் அம்போடேரிசின் பி' என்பது தெரிய வந்தது.

இந்தியாவில் குறைவு
இந்த தொற்றுக்கான மருந்து இது தான் என்பதையும் பத்மஸ்ரீ மரு அசோக் குரோவர்,தலைமை கண் மருத்துவர், கங்காராம் கண் மருத்துவமனை, புது தில்லி அவர்களிடமும் பேசி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிய வருகிறேன். ஆனால் அது நம் நாட்டில் இப்போது குறைந்த அளவில் தான் உள்ளது, கிடைப்பதும் அரிது என்பதும் உணர்ந்து கொண்டேன்.

இறக்குமதி செய்ய வேண்டும்
இப்போது இருக்கும் காலக்கெடுவில் நம் உள்நாட்டு மருத்துவ நிறுவனங்கள் அத்தனை விரைவில் இந்த மருந்தை உற்பத்தி செய்வது கடினம் என்பதையும் உணர முடிகிறது. மேலை நாடுகளை விட இந்த நோய் இந்தியாவில் தான் அதிகம் காணப்படுகிறது. நமக்கு தற்போது தேவை சில ஆயிரம் நோயாளர்களுக்கு தேவையான மருந்துகளே. இந்த இறக்குமதி வாயிலாக பல இன்னுயிர்களை நம்மால் காக்க முடியும். காலத்தே செய்யும் எந்த செயலும் மட்டுமே அதற்குரிய நன்மை பயக்கும்.

நம்பிக்கை அளிக்க இறக்குமதி
அதனால் என்னுடைய இந்த கடிதம் வலியுறுத்தும் தீவிரத்தை உணர்ந்து நோயால் அல்லல்படும் நம் மக்களின் இன்னுயிர் காக்கவும் மருத்துவ உலகிற்கு நம்பிக்கை அளிக்கவும் மேலை நாடுகளில் எளிதில் தற்போது கிடைக்கக் கூடிய இந்த உயிர்காப்பான் மருந்து ஆகிய 'லிப்போசோமல் அம்போடேரிசின் பி' மருந்தை உடனடியாக இறக்குமதி செய்ய தங்களிடம் வேண்டுகிறேன். இவ்வாறு சு. வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
-
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications