ரயில்வே துறையில் பாஜகவின் வஞ்சகம்.. தெற்கு ரயில்வேக்கு ரூ.301 கோடி ஒதுக்கீடு! டென்ஷனான சு.வெங்கடேசன்
மதுரை: தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களுக்கு ரயில்வே துறையில் மத்திய பாஜக அரசு வஞ்சகம் செய்வதாக எம்பி சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார். 2024-25ஆம் ஆண்டில் புதிய வழித்தடத்திற்கு ரூ.31,458 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், அதில் தெற்கு ரயில்வேவுக்கு வெறும் ரூ.301 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டதாக கொந்தளித்துள்ளார்.
இதுதொடர்பாக சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மூத்த குடிமக்களுக்கான ரயில் பயணச்சலுகையை மீண்டும் வழங்க வேண்டும். 2020ல் நிறுத்தப்பட்ட இந்த சலுகையால் மூத்தோர் மருத்துவம் மற்றும் திருத்தலப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் திணறி வருகிறார்கள். அதேபோல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட பயணக் கட்டண சலுகைகளும், அபார ரத்து முடிவுகளும் கேள்விக்குறியாக இருக்கிறது.

பிங்க் புத்தகத்தை மீண்டும் வெளியிட வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக பிங்க் புத்தகம் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடியும் வரை வெளியிடப்படாததால், மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு வெளிப்படையான தகவல் கிடைக்கவில்லை. அதேபோல் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்கள் புதிய ரயில் பாதைகளுக்கு கடுமையான புறக்கணிப்பு நடைபெறுகிறது.
பட்ஜெட்டில் புதிய ரயில் பாதைகளுக்கு ரூ.31,458 கோடி ஒதுக்கப்பட்டாலும், தெற்கு ரயில்வேவுக்கு அதில் வெறும் ஒரு சதவிகித நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது சுமார் ரூ.301 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. கோவை மற்றும் மதுரையில் 2வது முனையம் அமைப்பது அவசியம். கோவை ஃபிளாட்ஃபாரங்கள் அதிக கூட்ட நெரிசலுடன் செயல்பட்டு வருவதால், போத்தனூரை இரண்டாவது முனையமாக மாற்ற வேண்டும்.
அதேபோல் மதுரை கூடல் நகர் ரயில் நிலையத்தை 2வது ரயில் முனையமாக உருவக்க வேண்டும். ரயில் பாதுகாப்பை உறுதி செய்ய இண்டர்கால் செய்யாத கேட்டுகளை உடனடியாக இண்டர்லாக் கேட்டுகளாக மாற்றுவதற்கு போதிய நிதி வழங்க வேண்டும். அண்மையில் செம்மங்குப்பத்தில் ஏற்பட்ட பள்ளி குழந்தைகள் உயிரிழப்புக்கு இண்டர்லாக் கேட்டுகள் இல்லாததே காரணம்.
அதேபோல் கொல்லம் - நாகூர் விரைவில் ரயிலை மீண்டும் இயக்க வெண்டும். தெற்கு ரயில்வேயில் உள்ள ஆயிரக்கணக்கான காலியிடங்களை நிரப்ப அனுமதி வழங்க வேண்டும். இறுதியாக மதுரையில் இருந்து மேலும் பல பயணிகள் ரயில்களை இயக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த சூப்பர் மாற்றம்.. தென் மாவட்ட மக்களுக்கு பெரிய நிம்மதி! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications