இன்று பெரியார் இருந்திருந்தால்.. ஆ. ராசா சிறை சென்றிருப்பார்.. சுப்பிரமணியன் சுவாமி தடாலடி
மதுரை: பெரியார் இருந்திருந்தால் திமுக இருந்திருக்காது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அதிரடியாக தெரிவித்துள்ளார்.
மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழக தொழில் வர்த்தக சங்க கட்டத்தில் பாஜக மூத்த நிர்வாகி சுப்பிரமணியன் சுவாமியின் 83 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் சுப்பிரமணியன் சுவாமி பேசுகையில் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குள் நாட்டில் மிகப் பெரிய மாற்றம் வர உள்ளது. நாட்டின் கலாச்சாரத்தை வெள்ளைக்காரர்கள் எரித்ததால் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி சென்றோம்.

சொந்த கால்
தற்போது அதிலிருந்து மீண்டும் சொந்த காலில் நிற்கும் அளவிற்கு வளர்ந்து வருகிறோம். ராணுவ உற்பத்தி அதிகரித்திருப்பதற்கு முக்கிய காரணமே நாம் நம்பர் ஒன்றாக ஒரு காலத்தில் இருந்தோம். அதனால் ஆங்கிலேயர்கள் இங்கு வந்து வியாபாரம் செய்து நம்மை பிரித்தனர்.

பாரதமாதா
பாரத மாதா நம்பர் ஒன் என்று மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஒரு நாடு சிறந்து விளங்க பொருளாதாரக் கொள்கை ராணுவக் கொள்கை பலமாக இருக்க வேண்டும். முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் திராவிடம் என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது என கேட்டேன்.

கட்சியின் சின்னம்
அது போல் உங்களுடைய பெயரும், கட்சியின் சின்னம் உதயசூரியனும் சமஸ்கிருத வார்த்தைகள் என்றும் நான் அவரிடம் சொன்னேன். மேலும் ஆரியம் என்ற சொல் ஜெர்மனியில் இருந்து வந்தது. இந்தியாவை பிளவுபடுத்தவே ஆங்கிலேயர்கள் ஆரியர்கள், திராவிடம் என்ற பிரிவினையை கொண்டு வந்தனர்.

நாட்டை யாராலும் பிரிக்க முடியாது
இந்த நாட்டை யாராலும் பிரிக்க முடியாது. ஆனால் பாகிஸ்தானை நாம் பிரிப்போம். தமிழர்களுக்கு தவறாக கற்று கொடுக்கப்படுகிறது. தமிழர்கள் அறிவு உள்ளவர்கள். ஆனால் தைரியம் இல்லாதவர்கள். எனவே ஒரு புதிய தமிழனை உருவாக்க வேண்டும். 1991 ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய பெரும்பங்காற்றினேன்.

ராணுவத்தினர்
இந்திய ராணுவத்தினரை கொலை செய்த விடுதலை புலிகளுக்கு இங்கே சிகிச்சை அளிக்கக் கூடாது. அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் சொன்னேன். ஆனால் அவர் கேட்கவில்லை. அவர்கள் தமிழர்கள் அதனால் சிகிச்சை அளிப்போம் . அப்படியென்றால் உங்கள் ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய பரிந்துரைப்பேன் என கூறினேன்.

திமுகவின் எம்பி ஆ ராசா
அப்படி செய்தால் ரத்த ஆறு ஓடும் என சொன்னார். ஆனால் டிஸ்மிஸ் செய்த பிறகு அப்படி ஒன்றும் நடக்கவில்லை. திமுகவின் எம்பி ஆ ராசா மோசமாக பேசி வருகிறார். அது தொடர்பாக வழக்கு ஒன்றை தொடுத்துள்ளேன். விரைவில் அவர் சிறைக்கு செல்வார். தமிழ் தாய்மொழி, இந்தி கற்றுக் கொண்டால் என்ன தவறு.

கட்டாயம்
கட்டாயம் என நான் கூறவில்லை. இந்தியை கற்றுக் கொள்ள விரும்புபவர்களை ஏன் தடை போடுகிறீர்கள் என தான் கேள்வி எழுப்புகிறேன். பெரியார், பெரியார் என கூறுகிறார்களே அந்த பெரியார் இன்று இருந்திருந்தால் திமுக இருந்திருக்காது. தமிழக சட்டசபை தேர்தலில் களமிறங்கி பணியாற்ற உள்ளேன் என்றார்.












Click it and Unblock the Notifications