ஹலோ பிடிஆர்.. ஸ்கூல் பையன் மாதிரி.. வாய்சவடால்விட்ட குஷ்பு.. சுந்தர்.சி-யை கோர்த்துவிட்ட மனைவி!
மதுரை: மதுரை மத்திய தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பாக இயக்குநர் சுந்தர்.சி வேட்பாளராக களமிறங்கி இருக்கும் நிலையில், அதே தொகுதியில் திமுக சார்பாக நிற்கும் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் குறித்து நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு பதிவிட்டுள்ள பழைய ட்வீட்கள் டிரெண்டாகி வருகிறது.
மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி சார்பாக இயக்குநர் சுந்தர்.சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். திமுக சார்பாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் களமிறக்கப்பட்டிருக்கிறார். இந்த தொகுதியில் ஏற்கனவே இரு முறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வென்று இருக்கிறார். சுந்தர்.சி வெளியூர்காரர் என்பதோடு, மதுரை மத்திய தொகுதி எல்லைகள் கூட தெரியாதவர்.

நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்புவின் அழுத்தம் காரணமாக சுந்தர்.சி அரசியல் களமிறங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. பாஜகவில் தனக்கு சீட் கொடுக்கப்படாததால், ஆஸ்தான தயாரிப்பாளரான ஏசி சண்முகம் மூலம் ஒரு சீட் பெற்று குஷ்பு தனது கணவரை களமிறக்கி இருப்பதாக பார்க்கப்படுகிறது. சுந்தர்.சி-க்கு இருக்கும் ஒரே சாதகம் இரட்டை இலை சின்னம் தான்.
இதனால் தனது கணவருக்கு ஆதரவாக குஷ்புவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று தெரிகிறது. வேட்புமனு தாக்கலின் போதே இரட்டை இலை சின்னமான பச்சை நிறத்தில் சேலை அணிந்து வந்திருக்கிறார். இதனிடைடே நிதியமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இருந்த போது, அவரை வம்புக்கு இழுத்து குஷ்பு பதிவிட்டுள்ள ட்வீட் சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.
2022ஆம் ஆண்டு மத்திய அரசு தமிழ்நாட்டிற்கான ஜிஎஸ்டி நிலுவை தொகையை விடுவித்தது. அதற்கு பாஜக நிர்வாகி குஷ்பு, என்ன பிடிஆர் ஹலோ.. இப்போ என்ன? பெட்ரோல், டீசல் விலையில் நீங்கள் வரியை குறைப்பீர்களா? இல்லை நீங்கள் தேவையின்றி மீண்டும் கத்தி கத்தி பேசுவீர்களா? பெட்ரோல், டீசல் பற்றி முதல்வர் ஸ்டாலின் பேசுவாரா?
இல்லை ஸ்கூல் பையன் போல தொடர்ந்து புகார் லெட்டர்களை அனுப்புவாரா? என்று பதிவிட்டார். தற்போது பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு எதிராகவே குஷ்பு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதனால் திமுகவினர் நடிகை குஷ்பு மீதான ஆவேசத்தை சுந்தர்.சி-க்கு எதிராக தேர்தலில் காட்ட தயாராகி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications