Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'சினிமா சங்கி' சுந்தர்.சி-யை விளாசிய பிடிஆர்.. குஷ்புவுக்கும் பதிலடி! சூடுபிடித்த மதுரை தேர்தல் களம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: அதிமுக கூட்டணி சார்பாக மதுரை மத்திய தொகுதியில் களமிறங்கிய இயக்குநர் சுந்தர்.சி தொடர்ச்சியாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து வந்தார். அதற்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், சினிமா சங்கி சுந்தர்.சி-யை இனி ஒவ்வொரு பிரச்சாரத்திலும் மதுரையைப் பற்றிய அறிமுகப் பாடம் புகட்டப்படும் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள புதிய நீதிக் கட்சி சார்பாக மதுரை மத்திய தொகுதியில் இயக்குநர் சுந்தர்.சி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தயாரிக்கும் படங்களை மட்டும் சுந்தர்.சி இயக்கி வந்தார். அதிகாரப்பூர்வமாக சுந்தர்.சி அந்தக் கட்சியில் கூட இணைந்திருக்கவில்லை.

Sundar C

இப்படியான சூழலில் திடீரென புதிய நீதிக் கட்சி சார்பாக சுந்தர்.சி-க்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஏ.சி.சண்முகம் தரப்பில் இதுவரை எதன் அடிப்படையில் இயக்குநர் சுந்தர்.சி-க்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது என்ற விளக்கம் கூட அளிக்கப்படவில்லை. அதேபோல் கணவர் சுந்தர்.சி-க்காக மனைவி குஷ்பு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அதேபோல் சுந்தர்.சி-யும் திடீரென அரசியலுக்கு வந்தது ஏன் என்றும் பேசவில்லை. மதுரை மத்திய தொகுதியில் சமூக ரீதியிலான வாக்குகளை அறுவடை செய்ய சுந்தர்.சி பல்வேறு அமைப்புகளையும் சந்தித்து வருகிறார். அவருடன் அதிமுகவின் மன்னன் மற்றும் எஸ்ஸார் கோபி ஆகியோர் இருக்கின்றனர். இதனிடையே சுந்தர்.சி-யின் பிரச்சாரத்தில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை தொடர்ந்து அட்டாக் செய்து வந்தார்.

மதுரை மாநகராட்சி ஊழல், மதுரை குப்பை நகரம் என்றும் விமர்சித்து வந்தார். அதற்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார். அதில், இத்தனை ஆண்டு கால என்னுடைய பொதுவாழ்க்கைப் பயணத்தில், என்னை எதிர்த்தோ அல்லது எங்கள் கட்சியை எதிர்த்தோ தேர்தலில் போட்டியிட்ட எந்த மாற்றுக்கட்சியினரையும் நான் குறிப்பிட்டு விமர்சித்ததில்லை.

2016, 2019, 2021, 2022, 2024 என எந்தத் தேர்தலாக இருந்தாலும், எங்கள் அணுகுமுறை எப்போதும் தெளிவானதே. நாங்கள் யார், நாங்கள் செய்துள்ள பணிகள் என்ன, மக்கள் எதற்காக எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதே எமது பரப்புரைகளின் மையக் கருத்தாக இருந்து வருகிறது. ஆனால் "மதுரைக்காக எதுவும் செய்யப்படவில்லை" என தொடர்ந்து அவதூறுகளைப் பரப்புகின்றனர்.

சில கொள்கையற்றவர்கள், பல கட்சிகள் தாவியவர்கள், தொகுதியைப் பற்றிய புரிதல் அற்றவர்கள், நிர்வாகம் எப்படி செயல்படுகிறது என்பதையே அறியாதவர்கள், தரவு, வரலாறு, பகுப்பாய்வு என எதிலும் அடிப்படை அறிவு இல்லாதவர்கள், பணம் செலவழித்து பரப்பும் அத்தகைய புரட்டுக்களை உடைத்து உண்மையை வெளிப்படுத்துவது இப்போது என் அடிப்படை கடமையாகிறது.

அதே போன்று, இத்தகைய அவதூறுகளுக்கு துணை நிற்கும் சந்தியா ரவிஷங்கர், வினோத் அருளப்பன், சென்னை அப்டேட்ஸ் - ராகுல் போன்ற பிற தரகர்களையும் உரிய நேரத்தில் அம்பலப்படுத்துவேன். அதனால், இனி என் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் அனைத்திலும் "சினிமா சங்கிக்கு" மதுரையைப் பற்றி அறிமுகப் பாடம் புகட்டப்படும்.

நம்பகத்தன்மையற்ற ஒருவருக்கு அரசியல் ரீதியான பாதுகாப்பு வழங்குவதற்காக மட்டுமே இயங்கும் சாதியவாதக் கட்சியின் முகத்திரையும் கிழிக்கப்படும் என்று பதிலடி கொடுத்துள்ளார். தொடர்ந்து நடிகை குஷ்புவுக்கு, இதுவரை 3 கட்சிகள் மாறி இருக்கிறீர்கள். உங்களுக்கு வித்தியாசமான கொள்கைகள்.. அல்லது அரசியல் கட்சிகளுக்கு ஏற்ப கொள்கைகளை பின்பற்றுவீர்கள். அப்படி ஒரே கொள்கையை பின்பற்றினால், அதனை நிரூபித்து காட்டுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+