சுந்தர்.சி ஒரு சந்தர்ப்பவாதி.. 60% வாக்கு பெற்று வெல்வேன்.. சவால்விட்ட பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்!
மதுரை: மதுரை மத்திய தொகுதியில் திமுக வேட்பாளர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் என்டிஏ கூட்டணி வேட்பாளர் சுந்தர்.சி இடையிலான வார்த்தை மோதல் சாமானிய மக்களிடையே கவனத்தை பெற்றுள்ளது. சுந்தர்.சி-யின் சில வார்த்தைகளால் டென்ஷனான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், சினிமா சங்கி என்று கொந்தளித்தார்.
ஆனால் தேவையில்லாத வெளிச்சத்தை சுந்தர்.சி-க்கு கொடுக்க வேண்டாம் என்று தற்போது பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அமைதி காத்து வருகிறார். இதுதொடர்பாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், அரசியலுக்கு வருவதற்கு யாருக்கும் தகுதி இருக்க கூடாது என்பதே ஜனநாயகம்.

ஆனால் உங்களுக்கும், மதுரை மத்திய தொகுதிக்கும் என்ன சம்பந்தம் என்ற கேட்டால், என்றாவது எம்எல்ஏ ஆகலாம் என்று நினைத்தேன்.. என் தயாரிப்பாளர் என்னை அழைத்து மதுரையில் சீட் ஒதுக்கினார்கள்.. அதனால் வாங்க என்று அழைத்தார். இப்போது வந்துவிட்டேன் என்கிறார். அது மதுரைக்காரர்களுக்கு அவமரியாதை. சுந்தர்.சி-க்கு மக்களுடன் எந்த கனெக்ட் இருக்கவில்லை.
மக்களுடன் மக்களாக எந்த பிரச்சனைக்கும் நிற்கவில்லை. கடந்த 4 தேர்தலாக எதிர்க்கட்சி வேட்பாளர்களை நான் ஒருமுறை கூட கண்டித்து கூட பேசியதே இல்லை. என்னுடைய பட்ஜெட் தாக்கலின் போது, 2003 முதல் 2016-2021 வரையிலான பட்ஜெட் உரைகளின் டேட்டாவை எடுத்தேன். ஒரு விஷயத்தை தெரிந்து கொண்டு பேச வேண்டும் என்பதே எனது வாதம். சுந்தர்.சி-க்கு மதுரை மத்திய தொகுதி குறித்து ஒரு விஷயம் கூட தெரியாது.
மதுரை மத்திய தொகுதியில் பள்ளி எங்க இருக்கு, மருத்துவமனை எங்க இருக்கு, ரேஷன் கடை கூட எங்கு இருக்கிறது என்று தெரியாது. மக்கள் பிரச்சனைக்காக ஏதாவது ஒரு விஷயத்திற்காக குரல் கொடுத்துள்ளாரா? பொதுநலனுக்காக சொந்த பணத்தை செலவு செய்துள்ளாரா? சுந்தர்.சி ஒரு சந்தர்ப்பவாதி.. புதிய நீதிக் கட்சி ஒரு சாதிய கட்சி..
பழைய நீதிக் கட்சி வாரிசுகள் தேவையில்லை என்று அண்ணாமலை பேசியதுதான் கொந்தளிக்க வைத்துவிட்டது. நீதிக் கட்சி என்ற பெயர் எதற்காக வந்தது? எங்கள் குடும்பத்தில் கடைசியாக முதலியார் என்ற சாதிய அடையாளத்தை பயன்படுத்தி கொள்ளு தாத்தா காலத்தில் தான். அதன்பின் அனைவரும் ராஜன் என்ற பெயரையே பயன்படுத்தி வருகிறோம்.
நீதிக் கட்சியின் வரலாற்றை சுரண்டி, ஏ.சி.சண்முகம் தனது கட்சிக்கு அந்த பெயரை பயன்படுத்தி வருகிறார். வாக்கு எண்ணிக்கை அன்று 60% வாக்குகளை நான் கட்டாயம் வெல்வேன். சமுதாயத்தின் மக்களை வாக்குகளாக மட்டுமே சுந்தர்.சி பார்க்கிறார் என்று தெரிவித்துள்ளார். பழனிவேல் தியாகராஜனின் பேட்டி சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.
-
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி!












Click it and Unblock the Notifications