அவரு சினிமா இயக்குநருயா.. என்ன பண்ணி வச்சுருக்கீங்க.. சுந்தர் சிக்கு டப்பிங் கொடுத்த ஏ.சி.சண்முகம்
மதுரை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுக கூட்டணியில் எதிர்பார்த்த கட்சிகள் இணையவில்லை. ஆனால் இருக்கின்ற கட்சிகளின் பெயர்களையும் சரியாக சொல்ல முடியாமல் நிர்வாகிகள் திணறி வருகிறார்கள். ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூட்டணி கட்சி பெயர்களை சொல்ல முடியாமல் தவித்த நிலையில், அதே பாணியில் சுந்தர் சி சிக்கி தவித்துள்ளார்.
களம் காணும் சுந்தர் சி
அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகளும், புதிய நீதிக் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதி கட்சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறது. சினிமா இயக்குநரும், பாஜக மாநில துணை தலைவருமான குஷ்புவின் கணவர் சுந்தர் சி களம் காண்கிறார். திமுக அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு எதிராக கடுமையான போட்டியளிக்க இந்த முடிவை எடுத்துள்ளனர்.

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த சுந்தார் சி, "மதுரை மீனாட்சி அருளாளலும், மக்களின் ஆதரவாலும் மண்ணின் மைந்தனான நான் வெற்றி பெறுவேன் என்று நம்புகிறேன். வேட்பாளராக முதல்முறையாக மதுரை வந்து பேட்டியளிக்கிறேன். சினிமாவுக்காக எத்தனையோ பேட்டி வழங்கியுள்ளேன். இந்த களம் எனக்கு புதிது" என்றார். அதிமுக எடப்பாடி பழனிசாமி, புதிய நீதிக்கட்சி ஏ.சி சண்முகம், பாஜக நயினார் நாகேந்திரன், பாமக அன்புமணி ராமதாஸ் சரியாக சுந்தர் சி சொல்லிவிட்டார்.
தடுமாற்றம்
அதன் பிறகு மற்ற கட்சிகளின் பெயர்களை சொல்ல தடுமாறினார். பின்னால் இருந்த சக நிர்வாகிகள் எடுத்துக் கொடுத்தனர். அமமுக என்பதற்கு பதிலாக அமுமுக தினகரன் என்று தவறாக சொன்னார். அதையடுத்து தட்டு தடுமாறி ஐஜேகே பாரிவேந்தர், தமாகா ஜிகே வாசன் பெயர்களை சொல்லிவிட்டார். ஏசி சண்முகம் சொன்னதால் ஜான் பாண்டியனின் பெயரை கூறினார். அவரின் கட்சி பெயர் தெரியாததால் ஜான் பாண்டியன் பெயரோடு நிறுத்திவிட்டார்.
வைரலாகும் வீடியோ
திருமாறன் பெயரையும் ஏ.சி. சண்முகம் எடுத்துக் கொடுத்ததால் சுந்தர் சி சொன்னார். ஒரு வழியாக முடித்துவிட்டு, "அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் நன்றி" என்று சொல்லிவிட்டார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள், "சினிமா இயக்குநருக்கே ஒருத்தர் வசனம் எழுதி டப்பிங் கொடுக்க வேண்டியதா இருக்கு", "இதற்கு ஏ.சி சண்முகமே மைக்கில் பெயர்களை சொல்லியிருக்கலாம்" என்று கலாய்த்து கமென்ட் செய்து வருகிறார்கள்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications