தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை உச்ச நீதிமன்றம் அம்பலப்படுத்தி உள்ளது.. வெங்கடேசன் எம்பி

Subscribe to Oneindia Tamil

மதுரை: பல லட்சம் இந்தியர்களின் வாக்களிக்கும் உரிமையைத் திருடிய குற்றம் தேசத் துரோகத்துக்கு நிகரானது. இந்தக் குற்றத்துக்காக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகக் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும்" என மதுரை எம்பி யான சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம் பி சு வெங்கடேசன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், 'புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதற்கான ஆன்லைன் படிவம் 6-ல் மேற்கொள்ளப்பட்ட மாற்றம் சட்டவிரோதம் என இரண்டு தேர்தல் ஆணையர்களும் பதிவு செய்துள்ளனர். அதையும் மீறிதான் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் படிவம் 6-ஐ திருத்தியுள்ளார்.

Supreme Court

இந்த விவகாரம் குறித்து செப்டம்பர் 26-ஆம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையம் அளித்த விளக்கத்தில் படிவம் 6-ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை உச்ச நீதிமன்றம் தனது முந்தைய உத்தரவுகளில் ஏற்றுக் கொண்டுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.

ஆனால், இன்று நடந்த வழக்கு விசாரணையில் படிவம் 6-ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு நாங்கள் ஒப்புதல் அளிக்கவில்லை என உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவெ பல்வேறு தளங்களில் அம்பலப்பட்ட ஞானேஷ் குமார் இன்று உச்ச நீதிமன்றத்திலும் அம்பலப்பட்டுள்ளார்.

பல லட்சம் இந்தியர்களின் வாக்களிக்கும் உரிமையைத் திருடிய இந்தக் குற்றம் தேசத்துரோகத்துக்கு நிகரானது. இந்தக் குற்றத்துக்காக அவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும்' இவ்வாறு சு வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஸ்வர் குமார் இரண்டு தேர்தல் ஆணையர்களுடன் கலந்து ஆலோசிக்காமல், அவர்களது முடிவுகளை ஏற்றுக்கொள்ளாமல், தன்னிச்சையாக பல முடிவுகளை எடுத்ததாகவும் குறிப்பாக வாக்காளர் பட்டியலில் இரண்டு பெயர்கள் சேர்ப்பு மற்றும் நீக்கம் தொடர்பான விதிமுறைகளில் தன்னிச்சையாகவே அவர் மாற்றங்களை கொண்டு வந்தார் என்ற தகவல்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இந்நிலையில் இந்திய தலைமை நீதிபதி சூர்யா காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தொடர்பான வழக்கை விசாரித்து முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான 'படிவம் 6'-ல் (Form 6) இந்தியத் தேர்தல் ஆணையம் செய்துள்ள மாற்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளிக்கவில்லை என்று தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான அமர்வு அதிரடியாகத் தெளிவுபடுத்தியுள்ளது.

படிவம் 6 மாற்றத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துவிட்டதாகத் தேர்தல் ஆணையம் செய்திக்குறிப்பு வெளியிட்டிருந்த நிலையில், நீதிமன்றம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது. செய்தித்தாள் செய்திகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என தலைமை நீதிபதி சூர்ய காந்த் தெரிவித்தார். ஞானேஷ் குமாரை இடைநீக்கம் செய்தால் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்படும் என்றும், தேர்தல்களை யார் நடத்துவார்கள் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளார்கள். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றமே அளிக்கப்படும் தீர்ப்பு இந்தியாவில் மிகப்பெரிய அளவில் அதிர்வலைகள் ஏற்படுத்தப் போவது உறுதி என்கிறார்கள். இந்த வழக்கை ஆளும் பாஜகவும் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+