இந்தா ஆரம்பிச்சுட்டோம்.. தவிர்க்க முடியாத தலைவன் சூர்யா... மதுரையை தெறிக்கவிட்ட பிரமாண்ட போஸ்டர்கள்!
மதுரை: நீட் தேர்வை கடுமையாக விமர்சித்திருக்கும் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக மதுரையில் பிரமாண்ட போஸ்டர்களை ஒட்டி தவிர்க்க முடியாத தலைவன் என பட்டம் சூட்டியுள்ளனர் அவரது ரசிகர்கள்.
தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தால் அடுத்தடுத்து 3 மாணவர்கள் தங்களை மாய்த்துக் கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை ஒட்டி நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

சூர்யாவின் சுளீர் அறிக்கை
அந்த அறிக்கையில் நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்ச் சமூகத்தின் குரலாக தமது கொந்தளிப்பை கொட்டியிருந்தார் நடிகர் சூர்யா. இந்த அறிக்கையில் சூர்யா பதிவு செய்திருந்த ஒவ்வொரு அடியும் சவுக்கடியாக இருந்தது என்பதால்தான் இப்போது வரை அவர் மீது பாய்ந்து பிராண்டிக் கொண்டிருக்கிறார்கள்.

நீட் போன்ற மனுநீதி தேர்வுகள்
அதில், நீட் போன்ற ‘மனுநீதி' தேர்வுகள் எங்கள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது. அநீதியான தேர்வு முறைகளுக்கு தங்கள் பிள்ளைகளை வாரிக்கொடுத்துவிட்டு வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்கிற பெற்றோர்களுக்கு இது வாழ்நாள் தண்டனையாக மாறுகிறது என கதறி இருந்தார் சூர்யா.

சூர்யாவுக்காக நீதிமான்கள் ஆதரவு
மேலும் உயிருக்குப் பயந்து ‘வீடியோ கான்பிரன்ஸிங்' மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது எனவும் சீறியிருந்தார். இதற்காகவே சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்கிற குரல் எழுந்தது. ஆனால் சூர்யாவுக்கு ஆதரவாக நீதிமான்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

மதுரையை மிரட்டும் போஸ்டர்
இந்த நிலையில்தான் மதுரை சுவர்களை தெறிக்கவிடும் வகையில் பிரமாண்ட போஸ்டர்களை ஒட்டி சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் அவரது ரசிகர்கள். இதில், திரைப்பட வசனங்களில் மட்டும் குரல் கொடுக்கும் திரைநாயகன் அல்ல- சமூக பிரச்சனைகளுக்கு முதல் குரல் கொடுக்கும் தவிர்க்க முடியாத தலைவன் சூர்யா என அவரது ரசிகர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications