Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பேருந்து கட்டணம் உயர்வு.. அரசு எக்ஸ்பிரஸ் பஸ்ஸில் "ஸ்டிக்கர்".. தாறுமாறு டிக்கெட்.. என்னாச்சு பாருங்க

Subscribe to Oneindia Tamil

மதுரை: அரசு பஸ்களில், "எக்ஸ்பிரஸ்" என்று ஸ்டிக்கர்களை ஒட்டி, அதிகம் கட்டணம் வசூலிப்பதாக தொடரப்பட்ட வழக்கில், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து மனுதாரருக்கு பதிலளிக்குமாறு மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி முசிறி வழக்கறிஞர் ராஜேந்திரன் கடந்த 2018ல் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தொலைதூர பஸ்கள் இயக்கப்படுகின்றன... அவற்றில் இருக்கை வசதிகள் மிகவும் மோசமாக இருக்கின்றன.

முதலுதவி பெட்டிகள், வழித்தட வரைபடங்கள் இருப்பதில்லை... சாதாரண பஸ்களை எக்ஸ்பிரஸ் உட்பட பல்வேறு பெயர்களில் இயக்குகின்றனர். அனைத்து ஸ்டாப்களிலும் பஸ்களை நிறுத்தி பயணிகளை அழைத்துச் செல்கின்றனர். பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். வருவாய் ஈட்டும் நோக்கில் போக்குவரத்துக் கழக நிர்வாகம் சட்டவிரோதமாக செயல்படுவதால், பயணிகள் ஏமாற்றத்திற்குள்ளாகின்றனர்.

Tamil Nadu Government Ordinary Buses and what did Madurai High court ask about Express sticker on buses charge

நடவடிக்கை தேவை: இதுகுறித்த புகார்களை, தமிழக தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், போக்குவரத்துத்துறை செயலாளருக்கு அனுப்பினேன். கும்பகோணம், விழுப்புரம், சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

போக்குவரத்து கழக தலைவர், அரசு போக்குவரத்துக் கழக கோட்ட மேலாண் இயக்குநர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த மனுவானது, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி ஜி.இளங்கோவன் ஆகிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது, "சட்டம் மற்றும் விதிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதில், ஏதாவது விதிமீறல் இருந்தால் விதிகளின்படி அபராதம் விதிக்கலாம். குறிப்பிட்ட விதிமீறல்கள் சுட்டிக் காட்டப்பட வேண்டும்.

பைசல்: மனுதாரர் தனது கோரிக்கை தொடர்பாக ஏற்கனவே அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார். இந்த மனுவின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகள் 4 மாதத்திற்குள் உரிய பதிலை மனுதாரருக்கு வழங்க வேண்டும்.. தனக்கு வழங்கப்படும் பதிலை பொறுத்து மனுதாரர் உரிய மேல் நடவடிக்கை எடுக்கலாம்.. வழக்கு பைசல் செய்யப்படுகிறது" என்று கூறி மனுவை முடித்து வைத்தனர் நீதிபதிகள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+