திமுக முருகர் புகைப்படம் வைக்குமா?.. பெரியார் படம் அகற்றம் குறித்து தமிழிசை விளக்கம்
மதுரை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக -பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். மதுரை அதிமுக - தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் நுழைவு வாயிலில் இருந்த பெரியார் புகைப்படம் அகற்றப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "தமிழ்நாடு வந்தாரை வாழ வைக்கும், வரவேற்கும் பூமி. சாதாரண கிராமத்திற்கு சென்றால் கூட வீட்டிற்கு வரும் யாராக இருந்தாலும் அவர்கள் அமர்வதற்கு திண்ணை போடப்பட்டிருக்கும். தமிழ் தமிழ் என்று முதலமைச்சர் பொய்யாக பேசிக் கொண்டிருக்கிறார்.

அரசியல் காழ்புணர்ச்சி
தமிழ்நாடு வரும் பிரதமரை வரவேற்பதில் முதலமைச்சருக்கு என்ன பிரச்சனை. தமிழ் கலாச்சாரத்தை பற்றி பேசுவதற்கு திமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை. பிரதமர் ஏதோ அரசியலுக்காக தமிழ்நாடு வரவில்லை. தமிழ்நாட்டிற்கு ரூ.6,000 கோடி மதிப்பிலான திட்டத்தை செயல்படுத்துவதற்காக வருகிறார். எதுவும் தரவில்லை தரவில்லை என்கிறீர்கள்.
திட்டத்திற்காக வரும் பிரதமரை வரவேற்பது புரோட்டோகால். அதைக் கடந்து அது ஒரு பண்பு. இதை என்னால் ஏற்க முடியவில்லை. இதேபோல் இருந்த தெலங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆர் இன்றைக்கு வீட்டில் இருக்கிறார். அவரை வரவேற்க வேண்டும் என யாரும் தேடுவதில்லை. தனிப்பட்ட காழ்புணர்ச்சி அரசியல் ஒழிய வேண்டும் என்பது என்னுடைய கருத்து.
திமுக முருகர் படம் வைக்குமா
ஒரு நல்ல கலாச்சாரம் திமுகவால் மறைக்கப்பட்டு வருகிறது. கூட்டணி கட்சிகளை பாஜக அடிமைப்படுத்துகிறது என்று புகார் கூறி வருகின்றனர். நாங்கள் ஜனநாயக முறைப்படி கூட்டணி அமைத்துள்ளோம். கூட்டணி கட்சிகளை அவர்களின் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என கட்டாயப்படுத்துகிறார்கள். கூட்டணி கட்சிகளுக்க யார் அழுத்தம் கொடுக்கிறார்கள்.
இந்த திமுக அரசு எல்லாவற்றிலும் பணம் செலவு செய்து விளம்பரம் மட்டும் தான் செய்கிறது. திமுக கூட்டணியை தேஜகூ வீழ்த்தும். இன்னும் 2 மாதங்களில் ஆட்சி மாற்றம் நிச்சயம். மாநாடு நடத்துவோர் தான் அதில் யாருடைய படம் இடம்பெற வேண்டும் என முடிவு செய்வார்கள். திமுக கூட்டங்களில் எல்லா இடங்களிலும் முருகர் படம் வையுங்கள் என்றால் வைப்பார்களா.
மரியாதை கொடுப்போம்
மதுரையில் கூட்டம் நடத்தினால் மீனாட்சி அம்மன் படத்தை வைப்பார்களா. எங்கள் கூட்டத்தில் எந்த தலைவரின் படம் இடம்பெற வேண்டும் என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம். நாங்கள் அனைத்துத் தலைவர்களுக்கும் மரியாதை கொடுப்போம். ஆனால் எங்கள் கொள்கைக்கு நேர் எதிராக உள்ள ஒருவரின் படம் இருக்க வேண்டுமா என யோசித்தோம். அவ்வளவுதான்" என்றார்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications