ஒரு காலத்தில் விமர்சித்த வாய்கள், இப்போ எடப்பாடி ஆட்சியை பாராட்டுகின்றன: சிங்கை ராமச்சந்திரன் பேட்டி
மதுரை: எடப்பாடி பழனிச்சாமி முதன்முறையாக பொதுச் செயலாளராக வந்த போது, முதலமைச்சராக பதவி ஏற்ற போது வைக்கப்படாத விமர்சனங்களா? அதே வாய்கள்தான் இன்று அவரைப் போல ஒரு முதலமைச்சர் நான்கு வருடம் சிறப்பாக ஆட்சி செய்தார் என பாராட்டுகிறார்கள் என அதிமுக மாணவரணி மாநில செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவுக்கு இளம் பேச்சாளர்களை உருவாக்கும் வகையில் அதிமுக மாணவரணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அதிமுக பொதுச் செயலாலர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆலோசனையின் பேரில் தமிழகத்தை 9 மண்டலங்களாக பிரித்து இளம் பேச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் மதுரையில் திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த இளம் பேச்சாளர்களை தேர்வு செய்ய முகாம் நடைபெற்றது.
அதிமுக மாணவரணி:
இதில் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில் அவர்களது செயல்பாடுகளின் அடிப்படையில் 27 பேர் சென்னை பயிற்சி முகாமுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த தேர்வு முகாமில் அதிமுக மாணவரணி மாநில செயலாளர் சிங்கை ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர்கள் ஆர்பி உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களை தேர்ந்தெடுத்தனர்.
சிங்கை ராமச்சந்திரன்:
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"அதிமுக பொது செயலாளர் தமிழ்நாடு எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆலோசனையின் பெயரில் அதிமுகவுக்கு இடம் பேச்சாளர்களை தேர்வு செய்ய தமிழகம் முழுவதும் முகாம் நடைபெற்றுள்ளது. ஒன்பது மண்டலங்களில் தேர்வு நடைபெற உள்ள நிலையில் இதுவரை ஏழு மண்டலங்களில் நிறைவு பெற்றிருக்கிறது. மதுரையில் எட்டாம் கட்டமாக இளம் பேச்சாளர்கள் தேர்வு முகாம் நடைபெற்றிருக்கிறது. இந்த முகாமில் திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட அதிமுக 11 மாவட்டங்களில் இருந்து 27 இளம் பேச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதிமுக இளம் பேச்சாளர்கள்:
இதுவரை தமிழக முழுவதும் எட்டு முகாம்கள் மூலம் 200-க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். நாளை திருநெல்வேலியில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்த முகாமும் முடிவடைந்த உடன் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு சென்னையில் ஐந்து நாள் பயிற்சி அளிக்கப்படும். அதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் இளம் பேச்சாளர்களாக அறிவிக்கப்படுவார்கள்.
அதிமுக:
அதிமுக அதிக வலிமையாக இருக்கிறது. எங்கு போனாலும் ஆட்சி மாற்றம் எப்போது ஏற்படும் என மக்கள் கேட்கிறார்கள். மின்சார கட்டணம் உயர்வு, வீட்டு வரி உயர்வு, மாதம் ஒருமுறை மின்கட்டணம் என ஏமாற்றி விட்டார்கள், முதியோர் ஓய்வூதிய தொகை ஆயிரத்திலிருந்து ஆயிரத்து 500 ஆக உயர்த்தினாலும் இதுவரை வழங்கவில்லை. கல்வி கடனை ரத்து செய்யவில்லை, அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை முடக்கி விட்டார்கள், லேப்டாப் திட்டங்களை நிறுத்தி விட்டார்கள் என அடுக்கிக் கொண்டே போகலாம்.
முக ஸ்டாலின்:
எனவே திமுக ஆட்சி மீது மக்கள் கடுமையான அதிருப்தியில் இருக்கிறார்கள். நேற்று கூட ஒரு உணவகத்தில் ஒரு பெண் எங்களது அதிமுக வேட்டியை பார்த்துவிட்டு நீங்கள் எல்லாம் அதிமுகவா எப்படியாவது திமுகவை விரட்டி விடுங்க என்கிறார்கள். என்ன நடக்குது என்றே தெரியவில்லை என புலம்புகிறார்கள். முதலமைச்சர் செயல்படாத முதலமைச்சராக இருக்கிறார். அவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வேண்டும் என சொல்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி:
அனைத்து மக்களும் அதையே சொல்கிறார்கள். உறுதியாக 2026 இல் அதிமுக ஆட்சி அமைக்கும் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆவது உறுதி. மக்களும் மகிழ்ச்சியோடு பல திட்டங்களை அனுபவிப்பார்கள். அதிமுக கூட்டணி தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் வருகிறது. 1000 பேர் ஆயிரம் விமர்சனங்கள் சொல்வார்கள். எடப்பாடி பழனிச்சாமி முதன்முறையாக பொதுச் செயலாளராக வந்த போது முதலமைச்சராக பதவி ஏற்ற போது வைக்கப்படாத விமர்சனங்களா? அதே வாய்கள்தான் இன்று அவரைப் போல ஒரு முதலமைச்சர் இல்லை, நான்கு வருடம் சிறப்பாக ஆட்சி செய்தார் என பாராட்டுகிறார்கள்.
அதிமுக கூட்டணி:
விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கும். காய்த்த மரம் தான் கல்லடி படும். கூட்டணியை எடப்பாடி பழனிசாமி பார்த்துக் கொள்வார். அவர் காட்டும் திசையை நோக்கி கண்ணசைவில் கட்டுப்பட்டு வேலை பார்க்க நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்றார்.
-
ராமதாஸின் விஸ்வாசிக்கு வலைவீசும் விஜய்.. தவெகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியன்? -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
அதிகரித்த மின்வெட்டு! அவதியான மக்கள்! வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரை அரசு! விளாசிய எடப்பாடி -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அதிமுக உடன் இணைகிறதா அமமுக? காட்டுத்தீயாகப் பரவும் தகவலுக்கு டிடிவி தினகரன் விளக்கம்! -
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர்












Click it and Unblock the Notifications