மதுரையில் தமிழ்ச்செல்வன் மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டம்.. வலுக்கட்டாயமாக கைது செய்த போலீசார்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழ்ச்செல்வன் மரணத்தை கொலை வழக்காக மாற்றக்கோரி தமிழ்ச்செல்வன் நீதிக்கான கூட்டியக்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தமிழ்ச்செல்வன் உறவினர்கள் மற்றும் பொதுமக்களை வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம், ஆனையூர் கூடல்புதூர் பகுதியைச் சேர்ந்த தமிழ்செல்வன் என்ற பள்ளி மாணவன், 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று நண்பர்களுடன் விளையாடச் சென்ற நிலையில், பின்னர் அவரது சடலம் முட்புதர் குட்டையில் இருந்து கடந்த திங்கள்கிழமை மீட்கப்பட்டது. இது தொடர்பாக சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் உடல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tamilselvan Death Case Protesters Detained While Besieging Police Commissioner s Office

இந்நிலையில் பள்ளி மாணவன் தமிழ்ச்செல்வன் மரணத்தை கொலை வழக்காக மாற்றக் கோரியும், விசாரணை அதிகாரியை உடனடியாக மாற்ற வேண்டும், விசாரணையை துரிதப்படுத்தி குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக் கோரியும் தமிழ்ச்செல்வன் நீதிக்கான கூட்டியக்கம்' சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

பள்ளி மாணவன் தமிழ்ச்செல்வன் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மாணவி ஒருவரின் தந்தை மீது சந்தேகம் உள்ளது. வீட்டின் அருகே வசிக்கும் பத்தாம் வகுப்பு மாணவியோடு தமிழ்ச்செல்வன் பேசி பழகியதாகவும், இருவரும் வெவ்வேறு சமூகங்களை சேர்ந்தவர்கள் என்பதால் இதற்கு மாணவியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆனால் அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்த மறுத்து வருகின்றனர். ஆணவப் படுகொலை என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட வேண்டும். மாணவனை மிரட்டிய மேட்டு தெரு பகுதியைச் சேர்ந்த இளைஞர்களை கைதுசெய்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்ச்செல்வன் மரணத்தை கொலை வழக்காக மாற்றக்கோரி தமிழ்ச்செல்வன் நீதிக்கான கூட்டியக்கம் சார்பில் புதூர் சாலையில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தமிழ்ச்செல்வன் உறவினர்கள் மற்றும் பொதுமக்களை வலுக்கட்டாயமாக போலீசார் கைது செய்தனர்.

தமிழ்ச்செல்வனின் உறவினர் பெண் ஒருவரை பெண் போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். கைது செய்ய ஒத்துழைக்காமல், அவர் சாலையில் படுத்துக்கொண்டார். அவரை போலீசார் பலவந்தமாகப் பிடித்து இழுத்து கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+