One India Impact: தஞ்சாவூர் சிறுவனுக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை! முதல்வர் ஸ்டாலின் உதவி!
மதுரை: ஒன் இந்தியா தமிழ் செய்தி எதிரொலியாக தஞ்சாவூரை சேர்ந்த சிறுவனுக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முதல்வரின் ஒருங்கிணைந்த மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மேற்கொள்ள முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சையை சேர்ந்த 12 வயது சிறுவன் எலும்பு மஜ்ஜை நோயால் அவதிப்படுவதாக தகவல்கள் கிடைத்தன. இது குறித்து ஒன் இந்தியா தமிழ் சார்பில் அந்த சிறுவனை அணுகிய போது, தனக்கு ரத்தம் ஊறவில்லை, உடல் சோர்வாக இருப்பதாகவும், ஆபரேஷன் செய்தால் உடம்பு நல்லாயிடும் என்றும் கண்ணீர் விட்டார்.

மேலும் தனக்கு 12 வயதானாலும் 8 வயதுக்குரிய வளர்ச்சியே இருப்பதாகவும் தன்னுடன் படிக்கும் சகமாணவர்கள் தன்னை கிண்டல் செய்வதாக கண்ணீர் மல்க கூறியிருந்தார். சிறுவனின் உடல்நிலை குறித்து தாய் பேசுகையில், எனது மகனுக்கு ரத்தம் ஊறவில்லை, எது சாப்பிட்டாலும் உடலில் தங்க மாட்டேங்கிது.
அவனுக்கு எலும்பு மஜ்ஜையில் பிரச்சினை இருப்பதாக சொன்னார்கள். கடந்த 4 ஆண்டுகளாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறோம். ஆனாலும் இந்த பிரச்சினை சரியாகவில்லை. ஒரு கட்டத்தில் அவரது உடலுக்கு பொருத்தமான எலும்பு மஜ்ஜை கிடைக்கவில்லை என்பதாலும் சிறுவனின் உடல்நிலை மோசமாக இருப்பதாலும் தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்துக் கொள்ளுமாறு அரசு மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.
இதனால் தனியார் மருத்துவமனையை நாடிய போது எலும்பு மஜ்ஜை அறுவை சிகிச்சைக்கு 12 லட்சம் செலவாகும் என கூறிவிட்டனர். எனது கணவர் வெல்டிங் வேலை பார்த்து வந்தார். அவருக்கு திடீரென உடல்நலம் சரியில்லை, அதனால் அவர் வீட்டில்தான் இருக்கிறார்.
எங்களால் ரூ 12 லட்சம் கொடுத்து அறுவை சிகிச்சை செய்ய இயலாது. எனவே அரசாங்கம் உதவி செய்தால் நன்றாக இருக்கும் என கோரிக்கை விடுத்திருந்தார். சிறுவன், தாயின் வீடியோவை ஒன் இந்தியா தமிழ் இன்ஸ்டாகிராம் போஸ்டில் வெளியிட்டதும், 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அதைப் பார்த்தனர். இந்த செய்தியை, முதல்வருக்கும் அமைச்சர் அன்பில் மகேஷுக்கும் டேக் செய்திருந்தோம்.
அந்த வகையில் ஒன் இந்தியா தமிழ் செய்தி எதிரொலியாக சிறுவனுக்கு முதல்வரின் ஒருங்கிணைந்த மருத்துவ காப்பீடு திட்டத்தில் அறுவை சிகிச்சை செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை அடுத்து சிறுவன் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்!












Click it and Unblock the Notifications