கடனுக்கு டீ கொடுக்க மறுப்பு.. டீக்கடைக்காரர் படுகொலை.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்
Recommended Video
மதுரை: கடனுக்கு டீ கொடுக்க மறுத்த டீ கடை உரிமையாளரை ஆறு இளைஞர்கள் சேர்ந்து வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை கிருஷ்ணாபுரக்காலணி பாரதி தெருவில் டீக்கடை நடத்தி வருபவர் மாரிமுத்து. இவர் டீக்கடையில் சில இளைஞர்கள் கடனுக்கு டீ கொடுக்க வற்புறுத்தி வந்துள்ளனர்.

அதற்கு மாரிமுத்து மறுத்துள்ளதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் இன்று காலை டீக்கடையில் புகுந்து மாரிமுத்துவை கத்தி , பாட்டில் உள்ளிட்டவைகளால் தாக்கிவிட்டு தப்பியோடி விட்டனர்.
இதில் படுகாயமடைந்த மாரிமுத்துவை மீட்டு அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். ஆனால் மாரிமுத்து இறந்து விட்டார். மேலும் டீக்கடை அருகே இதில் சம்பந்தபட்ட இளைஞர்கள் கஞ்சாவும் விற்று வந்துள்ளதும் தெரியவந்தது.
இது குறித்து போலீஸாரிடம் புகார் கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது. கொலை குறித்தும் இதில் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் குறித்தும் தல்லாகுளம் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
கடனுக்கு டீ தர மறுத்த டீக்கடைக்காரரை கொலை செய்த சம்பவம் மதுரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்களின் கோபம் எந்தளவுக்கு செல்கிறது என்பதை உணர்த்தும் சம்பவங்கள் அண்மைகாலமாக நடைபெற்று வருகின்றன.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications