திருப்பரங்குன்றத்தில் மீண்டும் பரபரப்பு.. திடீர் போராட்டத்தில் குதித்த பாஜகவினர்.. கைது செய்த போலீஸ்
மதுரை: திருப்பரங்குன்றம் மலை மீது ஏறுவோம் என்று கூறிய கோட்டை தெரு கிராம மக்களை போலீசார் கைது செய்தநிலையில் அவர்களை விடுதலை செய்யக்கோரி திருநகர் பேருந்து நிறுத்தம் அருகே பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மதுரை - திருப்பரங்குன்றம் சாலையில் இருபுறமும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
சுமார் 200 க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினரை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

திருப்பரங்குன்றம் மலை மீது
மதுரை திருமங்கலம் பகுதியில் இன்று காலை திருப்பரங்குன்றம் மலை மீது ஏறுவோம் என்று கூறி கோட்டை தெரு பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில், திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் உள்ள மக்கள் திருப்பரங்குன்றம் மலை சந்தணக்கூடு நிகழ்வுக்காக மலை மீது ஏறினால், நாங்கள் திருப்பரங்குன்றம் கோவிலில் தீபம் ஏற்றுவோம்.. கொடி மரம் கொண்டு வரும் போது நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கோட்டை தெரு பகுதி மக்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கைது செய்த போலீசார்
ஆண்கள், பெண்கள் என சுமார் 20 பேர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து திருநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இதையடுத்து பாஜக முன்னாள் தலைவர் ஹெச் ராஜா அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து மாலை 6 மணியளவில் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டு இருந்தது.
சாலை மறியல் போராட்டம்
ஆனால் மாலை 6 மணி ஆகியும் அவர்கள் விடுவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் திருமங்கலம் திருநகர் பகுதியில் இன்று இரவு 200-க்கும் மேற்பட்ட பாஜகவினர் குவிந்தனர். அவர்கள் கோட்டை தெரு பகுதி மக்களை உடனே விடுவிக்க வேண்டும் என்று அப்பகுதியில் பேரணி நடத்தினர். ஆனாலும் போலீசார் அவர்களை விடுவிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து மதுரை - திருமங்கலம் சாலையில் பாஜகவினர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். திடீரென 200-க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் மதுரை - திருமங்கலம் சாலையில் சுமார் 2 கிமீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினரை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications