மோடிச் சாமிக்காக காவி வேட்டி அணிந்த ஓபிஎஸ்.. ஆளுநர் பதவியை பெற திட்டம்.. தங்கதமிழ்ச் செல்வன் பரபர
மதுரை: மோடிச் சாமிக்காக காவி வேட்டி அணிந்து கொண்டு ஆளுநர் பதவியை பெற ஓ.பன்னீர் செல்வம் திட்டமிட்டுள்ளதாக தங்கதமிழ்ச் செல்வன் தெரிவித்தார்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் அ ம மு க கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது :
தற்போது திமுக, அதிமுக தலைவர்கள் பிரச்சாரத்தில் அவர்களின் நிலைப்பாட்டில் பின்வாங்குகிறார்கள்.
எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரத்தில் சபாநாயகர் நடவடிக்கை அவசரமானது. தமிழக மக்கள் புதிய தலைமையை எதிர்பார்க்கிறார்கள், அம்மா இல்லாத நிலையில் அதிமுகவினர் திமுகவிற்கு வாக்களிப்பார்கள் என ஸ்டாலின் பேசுவது தவறானது.

புகார்
அமமுகவிற்கு தான் அம்மாவின் தொண்டர்கள் வாக்களிப்பார்கள். தமிழக மக்களுக்கு எடப்பாடி அரசு மீது நம்பிக்கை இல்லை என்பதையே அமைச்சர்களின் பிரச்சாரங்கள் வெளிப்படுத்துகிறது. திருப்பரங்குன்றம் தொகுதியில் பணபட்டுவாடா குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

சாமி
ஜெயக்குமார் விஞ்ஞானபூர்வமாக யோசிக்கிறார். காவி வேட்டி கட்டிக் கொண்டு ஐயப்ப சாமியை வணங்க நாம் செல்வோம். ஆனால் காவி வேட்டியை கட்டிகொண்டு மோடி சாமியை வணங்கத்தான் ஓபிஎஸ் குடும்பத்துடன் வாரணாசி சென்றுள்ளார். ஓபிஎஸ் குடும்பத்தால் தமிழகத்தின் மானம் வடமாநிலத்தில் காற்றில் பறக்கிறது.

அரசியல் வாழ்வு
மோடி நீட் தேர்வு கொண்டு வந்த காரணமே வடமாநில மாணவர்களை தமிழக கல்லூரிகளில் மருத்துவம் பயில சேர்க்க வேண்டும் என்பதால்தான். அமமுக என்பது அனைத்து தொகுதிகளிலும் நிச்சயம் வெல்லும். ஆளுநர் பதவியை பெற்று கொண்டு அரசியல் வாழ்வை முடித்துகொள்ளலாம் என ஓபிஎஸ் நினைக்கிறார்.

அமமுக
அவரது மகன் வெற்றிபெறமாட்டார், பதவிக்காக எதையும் செய்யகூடிய நபர் ஓபிஎஸ், பாஜக சொல்படியே ஓபிஎஸ் - ஈபிஎஸ் செயல்பாடுகிறார்கள். திமுகவின் பிரச்சாரம் என்பது எங்கள் மீதான அச்சத்தின் வெளிப்பாடு, வோட்டை பிரிக்கும் கட்சி அமமுக அல்ல. வெற்றிபெறும் கட்சியாக உள்ளது.

அதிமுக
நான் ஓபிஎஸ்சின் துரோகங்களை தான் எடுத்துக்கூறுகிறேன், அதிமுகவை நாங்கள் பிரிக்கவில்லை. நாங்கள் உண்மையான அதிமுக என்பதை தேர்தல் முடிவிற்கு பின் மக்களே அடையாளம் காட்டுவார்கள். தேர்தல் முடிவிற்கு பின் அதிமுக காணாமல் போகும். அமமுகதான் அதிமுக என்பதை நிரூபிப்போம்.

ஆதரவு
திருப்பரங்குன்றம் தொகுதியில் குடிநீர், பாதாள சாக்கடை, சாலை வசதி அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என மக்கள் குற்றச்சாட்டுகளை அடுக்குகின்றனர். நாடாளுமன்ற தேர்தல் முடிவிற்கு பின் இழுபறி நிலை ஏற்பட்டால் கட்டாயம் பாஜகவிற்கு ஆதரவு கொடுக்க மாட்டோம். பாஜக தவிர்த்து மற்ற கட்சிகளுக்கு ஆதரவு தொடர்பாக பொதுச்செயலாளர் முடிவு செய்வார் என தங்கதமிழ்ச் செல்வன் தெரிவித்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications