வெட்கமா இல்லை? குடிச்சு செத்தால் 10 லட்சம்..குழந்தை செத்தால் தர முடியாதா? தமிழக அரசை விளாசிய நீதிபதி

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை அருகே இலங்கை அகதிகள் முகாமில் சுவர் இடிந்து விழுந்து இறந்த குழந்தைக்கு ரூபாய் 5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட வழக்கில் மேல்முறையீடு தாக்கல் செய்த அரசுக்கு அபராதம் விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது

மேலும், வழக்கின் விசாரணையின் போது கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்து போன நபர் ஒன்றுக்கு பத்து லட்சம் கொடுத்த அரசு, சுவர் இடிந்து விழுந்து இறந்து போன குழந்தைக்கு 5 லட்சம் கொடுக்க முடியாமல் உள்ளதா நீதிபதிகள் கேள்வி எழுப்பியதோடு, அரசின் மேல் முறையீடு மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

10

மதுரை திருவாதவூர் அகதிகள் முகாமை சேர்ந்த அதிபதி, என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில்," என் 11 வயது மகள் சரண்யா. 6ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 12.5.2014-ல் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சரண்யா உயிரிழந்தார். அதற்காக ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 2014 ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தேன்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், சிறுமி உயிரிழப்புக்கு காரணமாக சுவரை கட்டிக் கொடுத்தது அரசு தான். இதற்கு அரசு தான் முழு பொறுப்பேற்க வேண்டும். இதனால் மனுதாரருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு அரசு வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருந்தார். மேலும் அங்குள்ள இலங்கை அகதிகள் அனைவரையும் கண்ணியமான முறையில் நடத்த வேண்டும் எனவும் உத்தரவை சுட்டிக் காட்டி இருந்தார்.

இந்நிலையில் சிறுமிக்கு 5 லட்சம் பணம் வழங்க பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி அரசு தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு இன்று நீதிபதிகள் ஆர் சுப்பிரமணியன் விக்டோரியா கௌரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு.

விசாரணையின் போது நீதிபதிகள் கள்ளக்குறிச்சியில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் அருந்தி இறந்து போனவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் பணம் கொடுப்பதற்கு அரசிடம் நிதி உள்ளது. ஆனால் ஒரு குழந்தை சுவர் இடிந்து விழுந்து இறந்துள்ளது.

அதற்கு உரிய நிதி கொடுக்க முடியாமல் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இது அரசுக்கு வெட்கமாக இல்லையா? எவ்வாறு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்தீர்கள்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அரசின் மனுவை தள்ளுபடி செய்து மேல் முறையீடு தாக்கல் செய்த அதிகாரிக்கு ரூபாய் 50,000 அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+