இறப்பிலும் 5 பேருக்கு மறுவாழ்வு அளித்த தேனி மாணவன்.. மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: தேனி மாவட்டத்தில் விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவன் மூளைச்சாவு அடைந்த சோகத்திலும் கூட அவரது தந்தை உடல் உறுப்புகளை தானம் செய்ய ஒப்புக்கொண்டு 5 பேருக்கு மறுவாழ்வு அளித்த சம்பவம் நெகிழ வைத்துள்ளது.

நாம் இறந்த பிறகு நமது உடல் உறுப்புகள் மண்ணோடு மண்ணாக வீணாகிவிடும். இதனால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. மாறாக நமது உடல் உறுப்புகளை தானமாக கொடுத்தால் நாம் இறந்த பிறகும் கூட சிலர் மறுவாழ்வு பெற்று வாழ்வார்கள்.

Theni district Brain death college students family donates his organs to 5 person

இதனால் தான் ஒவ்வொருவரும் உடல் உறுப்பு தானம் செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. முன்காலத்தை விட தற்போது உடல் உறுப்பு தானம் செய்வது சற்று அதிகரித்து இருந்தாலும் கூட பலரும் இன்னும் தயக்கம் காட்டி தான் வருகின்றனர்.

இதற்கிடையே தான் தேனியில் மகன் மூளைச்சாவு அடைந்த துயரத்திலும் கூட அவரது தந்தை உடல் உறுப்புகளை தானமாக வழங்கி 5 பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. அதாவது தேனி மாவட்டம் கம்பம் பகுதியைச் சேர்ந்தவர் பரத்குமார் (19). இவர் தேனி அருகே வீரபாண்டி சவுராஷ்ரா கல்லூரியில் பிபிஏ 2ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் தான் உத்தமபாளையம் அனுமந்தம்பட்டி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது இருசக்கர வாகனமும், இன்னொரு இருசக்கர வாகனமும் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பரத்குமார் பலத்த காயமடைந்தார். தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் மூளைச்சாவு அடைந்தார். இதுபற்றி டாக்டர்கள் அவரது குடும்பத்தினரிடம் கூறினர்.

இதனை கேட்ட குடும்பத்தினர் கதறி அழுதனர். இந்த வேளையில் பரத்குமாரின் உடல் உறுப்புகளை தானம் செய்யலாம். இப்படி செய்வதன் மூலம் உங்கள் மகனின் உறுப்புகள் மூலம் மற்றவர்கள் வாழ்வார்கள் என டாக்டர்கள் பரத்குமாரின் தந்தை உள்பட குடும்பத்தினரிடம் எடுத்து கூறினர். இதனை கேட்ட பரத்குமாரின் தந்தை உடல் உறுப்பு தானம் செய்ய ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து பரத்குமாரின் இதயம், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்டவை அவரது உடலில் இருந்து தானமாக எடுக்கப்பட்டது. இதையடுத்து அந்த உறுப்புகள் சென்னை, தஞ்சாவூர், திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்றவர்களுக்கு பொருத்தப்பட்டது. மேலும் மதுரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று ஒரு நோயாளியும் அவரால் மறுவாழ்வு பெற்றார். பரத்குமாரின் உடல் உறுப்பு தானத்தால் மொத்தம் 5 பேர் மறுவாழ்வு பெற்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+