காங்கிரஸ் செய்ய வேண்டிய வேலை.. கமல்ஹாசன் செய்து கொண்டிருக்கிறார்.. திருமாவளவன் பாராட்டு!
மதுரை: காங்கிரஸ் கட்சி செய்ய வேண்டிய வேலையை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் செய்து கொண்டிருக்கிறார் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். காந்தியின் பெயரில் இருந்த 100 நாள் வேலைத் திட்டத்தின் பெயரை மாற்றி அற்ப அரசியலை பாஜக செய்வதாக விமர்சித்த திருமாவளவன், காந்தியின் படுகொலை நியாயப்படுத்துகிற கும்பலை எச்சரிக்கும் சூழலில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி, இம்முறை தங்களின் கட்சியினரை சட்டசபைக்கு அனுப்ப வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறது. அதற்கேற்ப கமல்ஹாசனும் அரசியல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் காந்தியை நினைவு கூறும் வகையில் "மறவோம்" என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் உட்பட திமுக கூட்டணியில் உள்ள தலைவர்கள் பலரும் பங்கேற்றனர். விசிக, சிபிஐ, சிபிஎம், காங்கிரஸ், தவாகா, ஐயூஎம்எல், மமக உள்ளிட்ட தலைவர்கள் மேடையில் ஒன்றாக அமைந்தனர்.
இதில் விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், காந்தியடிகளே.. உங்களை மறவோம்.. உங்கள் அர்ப்பணிப்பை மறவோம்.. விடுதலைக்காக நீங்கள் ஆற்றிய பங்களிப்பை மறவோம் என்று அவருக்கு சொல்வதோடு, அவரை படுகொலை செய்த சனாதன கும்பலுக்கும், நீங்கள் செய்த தேசத் துரோகத்தை மறவோம்.. உங்களை ஒரு போதும் மன்னிக்க மாட்டோம் என்று சொல்லுகிற ஒரு செய்தியாக தான் கமல்ஹாசனின் அரிய முயற்சி.
இது மிகவும் நுட்பமான அரசியல்.. காந்தியை சிறுமைப்படுத்தும் கும்பல் ஆட்சியில் இருக்கிறார்கள்.. காந்தியின் நன்மதிப்பை சிதைக்கும் கும்பல் அது.. காந்தியடிகள் மீது தேசம் வைத்துள்ள பிம்பத்தை தவிடுபொடியாக்கும் கும்பல்.. காந்தியின் தலைமையை ஏற்றுக்கொண்ட படேலுக்கு வானுயர சிலை வைத்து.. படேல் தான் உயர்ந்தவர்.. காந்தி சிறியவர் என்று காட்டுகிற அற்ப முயற்சி செய்யும் கும்பல்.
காந்தியின் பெயரில் 100 நாள் வேலைத் திட்டம் இருந்தது.. அந்தப் பெயரை மாற்றுகிற அற்ப அரசியல் செய்யும் கும்பல் கோலோச்சுகிற இந்த சூழலில்.. கோட்சே ஒரு தேச பக்தர்.. தேசத் தலைவர் என்று சொல்லுவதன் மூலமாக காந்தியை படுகொலை செய்தது நியாயம் என்று நியாயப்படுத்துகிற கொலைக்கார கும்பலுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டிய இந்த சூழலில்.. காங்கிரஸ் செய்ய வேண்டிய வேலையை அண்ணன் கமல்ஹாசன் செய்து கொண்டிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications