"பச்சை துரோகம்" திருநாவுக்கரசு..திருச்சிக்கு சீட் வேணுமா? சட்டசபையில் "பாஞ்சாலி சபதம்": யார் பாருங்க
மதுரை: அதிமுக தொண்டர்களுக்கும், எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் ஒரு மிகப் பெரிய துரோகத்தை ஏற்படுத்தி விட்டு திமுகவுக்கு விசுவாசமாக இருக்கிறார் திருநாவுக்கரசு என்று மூத்த தலைவர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதை தொடர்நது, தமிழக அரசியலில் புயல் அடித்து கொண்டிருக்கிறது.. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சேலை இழுத்து அவமதிக்கப்பட்ட விவகாரம், பேசும்பொருளாக உருவெடுத்துள்ளது..
ஆங்கில நாளிதழுக்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த பேட்டியில், நிர்மலா சீதாராமன் வாட்ஸ்அப் வரலாற்றை படித்து விட்டு பேசியுள்ளதாகவும், ஜெயலலிதாவுக்கு சட்டமன்றத்தில் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்றும், அது ஜெயலலிதாகவே நடத்தி கொண்ட நாடகம் என்பதை அப்போது அவையில் இருந்த அனைவரும அறிவார்கள் என்று கூறியிருந்தார்.

போயஸ் கார்டன்: இதற்கு பிறகு, மூத்த தலைவர் திருநாவுக்கரசு தந்திருந்த ஒரு பேட்டியில், சட்டமன்றத்தில் நடக்க வேண்டியதை முன்னதாகவே, போயஸ் கார்டன் வீட்டில் ஜெயலலிதா ஒத்திகை பார்த்தார்.. அப்போது நான் உடனிருந்தேன்.. கலைஞர் முகத்தில் குத்து விடவும் இல்லை, ஜெயலலிதாவின் சேலை இழுக்கப்படவும் இல்லை" என்று கூறியிருந்தார்.
செல்லூர் ராஜு: திருநாவுக்கரசு இப்படி சொன்னதுமே, இந்த விஷயத்தில் அதிமுக சூடாகிவிட்டது.. இதற்கு அதிமுகவின் மூத்த தலைவர்கள் கருத்து சொல்லி வருகிறார்கள். அந்தவகையில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திருநாவுக்கரசு மீது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் மதுரை முனிச்சாலை பகுதியில் இருக்கக் கூடிய ஓபுலா படித்துறையிலிருந்து அதிமுக மாநாடு இருசக்கர வாகன பேரணி நடந்தது. இந்தப் பேரணியை செல்லூர் ராஜூ இன்று தொடங்கி வைத்தார்... அத்துடன், பைக்கில் சென்ற கட்சியினருடனேயே, செல்லூர் கே.ராஜூ தன்னுடைய காரில் பயணித்தார். பிறகு செய்தியாளர்களிடம் செல்லூர் ராஜு பேசியதாவது:
திருநாவுக்கரசு: ''1980-ம் ஆண்டில் எம்ஜிஆர் ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு எம்ஜிஆர் அவ்வளவுதான், இனி அரசியலிலும் ஜொலிக்க முடியாது, சினிமாவுக்கும் போக முடியாது என்றெல்லாம் சொன்னார்கள்.. ஆனால், அடுத்த தேர்தலில் மத்தியில் ஆளும் இந்திரா காங்கிரஸுடன் கருணாநிதி கூட்டணியிட்டு போட்டியிட்டார். இனிமேல் எம்ஜிஆருக்கு அரசியல் எதிர்காலமே இல்லை என்று சொன்னார்கள்.. அனைத்து கருத்து கணிப்புகளையும் பொய்யாக்கி, மறுபடியும் எம்ஜிஆர் ஆட்சியைப் பிடித்தார். இதுதான் எழுச்சி வரலாறு.
அதுபோன்ற வரலாற்றை மதுரை அதிமுக மாநாடு படைக்க உள்ளது. இந்த மாநாட்டுக்குப் பிறகு திமுக ஒரு தேய்பிறையாகத்தான் இருக்கும். திமுக ஆட்சி மிக விரைவில் மக்களால் தூக்கி எறியப்படும் என்கின்ற நிலை ஏற்படும்.
பாஞ்சாலி சபதம்: திருநாவுக்கரசர் வருகின்ற எம்பி தேர்தலில் மறுபடியும் திருச்சி தொகுதியில் போட்டியிட வேண்டும், அதற்கு திமுகவின் ஆதரவு வேண்டும் என்பதற்காகவே தன்னுடைய மனசாட்சியை அடமானம் வைத்துவிட்டு பேசுகிறார். சட்டசபையில் ஜெயலலிதா தாக்கப்பட்ட விவகாரத்தில் மனசாட்சிக்கு விரோதமாக பதில் சொல்லியிருக்கிறார். பாஞ்சாலி சபதம் போல் அன்றைக்கு சட்டசபையில் திமுக அமைச்சர்கள் ஜெயலலிதாவுடைய சேலையை பிடித்து இழுத்து தலைமுடியை பிடித்து தாக்கிய காட்சிகள் நடந்தன.
எடப்பாடி பழனிசாமி: அன்று நடந்த சட்டசபை நிகழ்வுகளை அன்று அவையில் உட்கார்ந்திருந்த எடப்பாடி பழனிசாமி தோலுரித்து காட்டி இருக்கிறார். அவருடைய நல்ல எண்ணம்தான் அவரை இன்று அவர் அதிமுகவினுடைய பொதுச் செயலாளராக ஆக்கி இருக்கிறது.

அறந்தாங்கியில் இருக்கக்கூடிய திருநாவுக்கரசு யாருக்கு அன்று தெரியும்? அவருக்கு விலாசம் கொடுத்தது அதிமுகதான். அன்றைக்கு பொதுச் செயலாளராக இருந்த எம்ஜிஆர், அவருக்கு அமைச்சராகவும், அமர்த்தி அழகு பார்த்தவர். தன்னுடைய நேரடி பார்வையில் இருந்த இளைஞர் அணிக்கு மாநில செயலாளர் பதவியும் கொடுத்தார். அவருக்கு பிறகு ஜெயலலிதா, என்னதான் திருநாவுக்கரசுவுடன் கருத்து மாறுபாடு இருந்தாலும் மீண்டும் அவரை அழைத்து மரியாதை கொடுத்தார்.
மனசாட்சி: ஆனால், இன்று திருநாவுக்கரசு, அதிமுக தொண்டர்களுக்கும், எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் ஒரு மிகப் பெரிய துரோகத்தை ஏற்படுத்தி விட்டு திமுகவுக்கு விசுவாசமாக இருக்கிறார். உண்மையில் அவர் மனசாட்சி பிரகாரம் சொல்லவில்லை. மனசாட்சியை அடகு வைத்து, வருகின்ற எம்பி தேர்தலில் திமுக தொண்டர்கள் அவருக்கு வேலை பார்க்க வேண்டும், அதனுடைய தலைவர்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதற்காகதான் அவர் பேசி இருக்கிறார்'' என்று கடுமையாக சாடியிருக்கிறார்.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications