அரசியல் லாபத்துக்காக.. திருப்பரங்குன்றத்தை, சிக்கந்தர் மலை என துணிச்சலாக திமுக கூறுகிறது - அமித்ஷா
மதுரை: ‛‛அறுபடை வீடுகளில் ஒன்றான ஆயிரம் ஆண்டு பழமையான திருப்பரங்குன்றத்தை, சிக்கந்தர் மலை என்று கூறும் துணிச்சல் திமுகவுக்கு வந்துள்ளது. பல ஆயிரம் ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள முருகன் வழிப்பாட்டு தலத்தை அரசியல் லாபம், பிரிவினை வாதம் உள்ளிட்டவற்றை மனதில் வைத்து திமுக செயல்பட்டு வருகிறது. இதனால் வரும் ஜூன் 22ம் தேதி முருகன் பக்தர் மாநாடு நடைபெற உள்ளது. அதில் பெருந்திரளாக கலந்து கொண்டு வலிமையை காட்ட வேண்டும்'' என்று மதுரையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சூளுரைத்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் 2 நாள் பயணமாக நேற்று இரவு மதுரை வந்தார். காலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

பிறகு மதுரை ஒத்தக்கடையில் பாஜக மாநில மாவட்ட மண்டல் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். அப்போது அமித்ஷா கூறியதாவது:
அறுபடை வீடுகளில் ஒன்றான ஆயிரம் ஆண்டு பழமையான திருப்பரங்குன்றத்தை, சிக்கந்தர் மலை என்று கூறும் துணிச்சல் திமுகவுக்கு வந்துள்ளது. பல ஆயிரம் ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள முருகன் வழிப்பாட்டு தலத்தை அரசியல் லாபம், பிரிவினை வாதம் உள்ளிட்டவற்றை மனதில் வைத்து திமுக செயல்பட்டு வருகிறது. இதனால் வரும் ஜூன் 22ம் தேதி முருகன் பக்தர் மாநாடு நடைபெற உள்ளது. அதில் பெருந்திரளாக கலந்து கொண்டு வலிமையை காட்ட வேண்டும்.
தமிழகத்தில் ஒவ்வொரு முறை வரும்போது நான் ஒன்றை கூறி வருகிறேன். தமிழ் தமிழ் என்று பேசுவோரால் உயர்கல்வி அனைத்தையும் தமிழில் கொண்டு வருவதில் என்ன பிரச்சனை இருக்கிறது?. இன்ஜினியரிங் பாடத்திட்டத்தை எல்லாம் தமிழில் கொண்டு வர வேண்டும். தமிழ்நாட்டின் மரபு சின்னமான மன்னர்கள் கையாண்ட செங்கோலை நாட்டின் உயர்ந்த இடத்துக்கு (நாடாளுமன்றம்) கொண்டு சென்ற மோடிக்கு ஸ்டாலின் நன்றி சொன்னாரா?.
நம் தொண்டர்களின் எண்ணம், சிந்தனை செயல்பாடு என்பது திமுகவை ஆட்சியை எப்படி அகற்ற வேண்டும்? எப்போது அகற்ற போகிறோம்? என்ற சிந்தனையுடன் தான் இருக்க வேண்டும். 2026 சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் சேர்ந்து பாஜக கூட்டணி அமைத்து தேர்தல் சந்திக்க உள்ளது. இந்த தேர்தலில் நம் கூட்டணி வெற்றி பெறும். வெற்றிக்கான உறுதிமொழியை எடுத்து கொள்ளுங்கள். உரத்த குரலில் சொல்லுங்கள். பாரத் மாதாகி ஜெ.. வந்தே மாதரம்.. வந்தே மாதரம்..'' எனக்கூறி பேச்சை முடித்தார்.












Click it and Unblock the Notifications