சிஐஎஸ்எப் பாதுகாப்பு.. நீதிமன்றம் சட்டம் ஒழுங்கை கையில் எடுக்க கூடாது.. தமிழக அரசு முக்கிய வாதம்
மதுரை: திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் தொடர்பாக தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்த தமிழக அரசு மேல்முறையீடு மனு மீதான விசாரணை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்போது சிஐஎஸ்எப் பாதுகாப்பு நீதிமன்றத்தை பாதுகாக்கவே என்றும், மனுதாரருக்கு அனுப்பியது ஏற்புடையதல்ல என்று திருப்பரங்குன்றம் தீப வழக்கில் தமிழக அரசு வாதிட்டது. அதேபோல் காவல்துறைக்கு இணையாக சிஐஎஸ்எப் செயல்பட முடியாது என்று வாதிட்ட தமிழக அரசு, நீதிமன்றம் சட்டம் ஒழுங்கை கையில் எடுக்க கூடாது என்று தெரிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இந்த உத்தரவை நிறைவேற்றாததால் வழக்கு தொடர்ந்த மனுதாரர்கள், சிஐஎஸ்எப் பாதுகாப்புடன் திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கு சென்று தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜிஆர்.சுவாமிநாதன் நேற்று மாலை உத்தரவிட்டார். இதனிடையே திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

அதேபோல் தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இதனால் திருப்பரங்குன்றம் மலை வாயிலில் காவல்துறை vs சிஐஎஸ்எப் என்ற நிலை உருவாகியது. எவ்வளவு பேச்சுவார்த்தை நடத்தியும், சிஐஎஸ்எப் மற்றும் மனுதாரரை போலீசார் அனுமதிக்கவில்லை.
இந்த நிலையில் தமிழக அரசின் மேல்முறையீடு மனு மீதான விசாரணை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடங்கியுள்ளது. அதில் தமிழக அரசு தரப்பில், சிஐஎஸ்எப் என்பது நீதிமன்றத்தை பாதுகாக்கவே.. மனுதாரருக்கு பாதுகாப்பாக அனுப்பியது ஏற்புடையது அல்ல.. அதேபோல் சிஐஎஸ்எப்-க்கு அதிகாரம் நீதிமன்ற எல்லைக்குள் மட்டுமே.. அதனைத்தாண்டி கிடையாது. சட்டத்தை மீறி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மனுதாரரின் மறைமுக உள்நோக்கம் என்னவென்று தெரியாது. நீதிமன்ற உத்தரவை வைத்துக் கொண்டு மனுதாரர் தரப்பு திருப்பரங்குன்றத்தில் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவு சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில்தான் இருக்க வேண்டும். உயர்நீதிமன்ற பாதுகாப்புக்கு வந்தவர்களை சட்டம் ஒழுங்கு பாதுகாப்புக்கு அனுப்ப முடியாது.
காவல்துறைக்கு இணையாக சிஐஎஸ்எப் செயல்பட முடியாது. தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவு தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கியது. நீதிமன்றம் சட்டம் ஒழுங்கை கையில் எடுக்க கூடாது என்றும் தமிழக அரசு வாதிட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications