தீபம் ஏற்ற வலியுறுத்தி.. திருப்பரங்குன்றம் தர்காவில் வழிபாடு! வேலூர் இப்ராஹிம் அறிவிப்பால் சலசலப்பு!
மதுரை: "திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வலியுறுத்தி, இன்று திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவில் வழிபாடு செய்த பின்னர், முருகன் கோவிலிலும் சாமி தரிசனம் செய்ய உள்ளேன்" என பாஜக தேசிய சிறுபான்மை பிரிவுச் செயலாளர் வேலூர் இப்ராஹிம் கூறியுள்ளார். ஏற்கெனவே திருப்பரங்குன்றம் விஷயத்தில் பதற்றம் நிலவி வரும் நிலையில், வேலூர் இப்ராஹிமின் அறிவிப்பு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது, "திருப்பரங்குன்றம் மலை உச்சியில், தீபம் ஏற்ற வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள் திமுக அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கோரிக்கைக்காக உயிர் நீத்தவரின் குடும்பத்தினரை சந்தித்து நான் ஆறுதல் கூற வந்துள்ளேன். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. அதற்காக இஸ்லாமியர்கள் ஆகிய நாங்களும் துணை நிற்போம்.

காவல்துறை அனுமதி
பாராளுமன்ற உறுப்பினர், திமுக ஆதரவால் ஜெயித்த நவாஸ் கனி, மாட்டுக்கறி பிரியாணியை முருகர் மலை என்று புனிதமாக கிரிவலம் செய்யக்கூடிய அந்த இடத்தில் உட்கார்ந்து சாப்பிடுகிறார். அதுக்கு காவல்துறை அனுமதி அளிக்கிறது.
தமுமுகவை சேர்ந்த அப்துல் சமது, முருகன் மலையை சிக்கந்தர் மலை என்று சொல்லி, தேவையற்ற முறையில் இந்துக்களுடைய உணர்வுகளை துன்புறுத்தும் வகையில் பேசி உள்ளார். அதற்கு காவல்துறை அனுமதிக்கிறது. ஆனால், நல்லிணக்கத்தோடு தர்காவிலிருந்து 50 மீட்டர் தொலைவில் இருக்கிற, தீப தூணில் தீபம் ஏற்றுவது வருஷத்துக்கு ஒரு நாள், அதுவும் ஒரு மணி நேரத்தில் நிகழ்வு, அதை செய்ய இந்துக்களை தடுக்கிறார்கள். இந்த அரசு தடுக்கிறது.
தீபம் உரிமை
தீபம் ஏற்றுவது என்பது, இஸ்லாமிய வழிபாட்டில் ஒரு முறை இருக்கிறது. நீங்கள் எந்த தர்காவிற்கு போனாலும் தீபம் ஏற்றப்படும். நாங்கள் அரேபியா, ஆப்கானிஸ்தானின் வாரிசுகளா? எங்கள் முன்னோர்கள் இங்குள்ள இந்து சொந்தங்களாக உள்ள குப்பனும் சுப்பனும்தான்.
பாரதிய ஜனதா கட்சியில் இஸ்லாமியர்களை இணைந்து, திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற நாங்களும் ஒன்று சேருவோம். இதுல இஸ்லாமியர்களுக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. நல்லிணக்கத்திற்கு கேடாக திமுக ஆட்சி நடக்கிறது. மதுரை என்ன பயங்கரவாதத்தின் பூமியா? அல்லது மதுரை ஆன்மீக பூமியா?
அமித்ஷாவிடம் புகார்
தேசிய ஜனநாயக கூட்டணி வெல்லும் என்கிற பயம் திமுகவிற்கு வந்திருக்கிறது. இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவு கொடுக்கிறார்கள் என்றால் அவர்கள் மீது அடக்குமுறை செய்ய அந்தந்த மதத்தில் இருந்து அடிப்படைவாதிகளை பயங்கரவாதிகளை தூண்டிவிடுவது திமுகவிற்கு கைவந்த கலை. சட்டவிரோதமாக காவல்துறையை பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். இது குறித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் புகார் அளிக்க இருக்கிறேன்.
வழிபாடு
இன்று மாலை, நல்லிணக்கத்திற்காக மத ஒற்றுமைக்காக, இஸ்லாமியர்கள் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை வரவேற்கிறோம் என்பதற்காக, நாங்கள் இஸ்லாமியர்கள் மூன்று பேர் சிக்கந்தர் அவுலியா தர்காவிற்கு சென்று வழிபாடு செய்கிறோம். பிறகு இந்த கோரிக்கைக்காக உயிர் நீத்த பூர்ணசந்திரன் ஆன்மா சாந்தி அடைய, முருகன் கோவிலில் நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்.
இன்றைக்கு எங்களுடைய வழிபாட்டை, காவல்துறை தயவு செய்து தடுக்கக்கூடாது. அரசியலமைப்புக்கு எதிராக காவல்துறை செல்லக் கூடாது என்று மீண்டும் தமிழக காவல்துறைக்கு பணிவான கோரிக்கை வைக்கிறேன்.
-
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
வேலைக்காகாத பாஜக மாடல்.. “கழக” பாணியைக் கையிலெடுக்கும் அண்ணாமலை! வேற லெவலாகும் வீ தி லீடர்! -
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
ஆரம்பமே இடிக்குதே.. திமுக லிஸ்ட்டில் வந்து சேர்ந்த தவெக.. அமித் ஷா சொன்னதை கேட்டீங்களா -
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications