Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பரங்குன்றத்தில் மலையுச்சியில் கார்த்திகை தீபத்தை ஏற்ற வாங்க! வழிபாடு நம் உரிமை: இந்து முன்னணி

Subscribe to Oneindia Tamil

மதுரை: "வழிபாடு நமது உரிமை.. அதிலும் சட்டத்தின்படி நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. திருகார்த்திகை தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை கோவில் நிர்வாகம் அலட்சியப்படுத்துவது கண்டிக்கத்தக்கது. எனவே வருகின்ற திருக்கார்த்திகை தினத்தில் திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்தூணில் தீபம் ஏற்றிட முருக பக்தர்கள் பெருந்திரளாக வருகைதர வேண்டுகிறோம்" என்று பக்தர்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளது இந்து முன்னணி.

திருப்பரங்குன்றம் மலை மீது ஆடு, கோழி பலியிடுதல் தடை செய்யப்பட வேண்டும் என்று இந்து முன்னணி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தது.. இந்த கோரிக்கையை நீதிமன்றமும் சமீபத்தில் ஏற்றுக்கொண்டிருந்தது.

Thiruparankundram Karthigai Deepam Madurai

அதேபோல திருப்பரங்குன்றம் மலையை வேறு எந்த பெயர்களிலும் அழைக்கக்கூடாது என்ற கோரிக்கையும் நீதிமன்றத்தால் அங்கீகாரம் செய்யப்பட்டது..

இந்து முன்னணி போராடி வெற்றி

இந்தத் தீர்ப்பினை இந்து முன்னணி மகிழ்ச்சியுடன் வரவேற்றிருந்தது. அப்போது இதுகுறித்து சொல்லும்போது, "ஆளும் கட்சியான திமுகவின் ஆதரவால், தூண்டுதலால் சில இஸ்லாமிய அமைப்புகள் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி, மதக்கலவரத்தைத் தூண்ட முயற்சித்தனர். முருகனின் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்திற்கு நேர்ந்த அவமதிப்பால் முருக பக்தர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

இந்த தீர்ப்பு முருகனின் அருளால் தர்மத்திற்கு கிடைத்த வெற்றி என்றே இந்து முன்னணி கருதுகிறது. இந்த தீர்ப்பை மதித்து தமிழக காவல்துறையும் அரசு அதிகாரிகளும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

திருப்பரங்குன்றத்தில் தீபம்

அதே போல திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். கோவிலின் வாயிலில் உள்ள மோட்ச தீபத் தூணில் ஏற்றிடக்கூடாது என பல ஆண்டுகளாக இந்து முன்னணி போராடி வருகிறது. நீதிமன்றம் மூலமும் தீபத்தூணில் ஏற்றுவதற்கு தீர்ப்பு கிடைத்தது. ஆனாலும் தமிழக அரசும் இந்து சமய அறநிலையத்துறையும் காவல்துறையும் நீதிமன்ற தீர்ப்பை அவமதித்து வருகிறது.

இதனை வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் மாபெரும் போராட்டத்தை இந்து முன்னணி நடத்தி வருகிறது. எனவே குன்றம் முருகனுக்கே என்ற தீர்ப்பை கொண்டாடும் வகையில் இந்த ஆண்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள பாரம்பரியமான தீபத்தூணில் மகா தீபம் ஏற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும்" என்று தீர்ப்பு வந்தபோதே அறைகூவல் விடுத்திருந்தது நினைவிருக்கலாம்.

மலையுச்சியில் தீபம்

இந்நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலைமீது கார்த்திகை தீபம் ஏற்ற பக்தர்களுக்கு இந்து முன்னணி மீண்டும் அறைகூவல் விடுத்துள்ளது. இதுகுறித்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.

அதில், "கார்த்திகை தீபத்திருவிழா தமிழகத்தின் பாரம்பரிய திருவிழாவாகும். அதிலும் முருகன் திருத்தலங்களில் விசேஷமாக கொண்டாடுவதுடன் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது மரபு ஆகும். அதன் அடிப்படையில் முருகனின் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தின் மலை உச்சியில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது காலங்காலமாக நடந்து வந்தது.

பழைய பாரம்பரியம்

இரண்டாம் உலகப் போரின்போது பாதுகாப்பு காரணம் கருதி பிரிட்டிஷ் அரசாங்கம் அந்த தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதை தடுத்துள்ளது. அதன் காரணமாக கோவிலின் முகப்பில் உள்ள இறந்தவர்களுக்காக தீபம் ஏற்றும் மோட்ச தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்றியுள்ளார்கள். தேசம் சுதந்திரம் அடைந்த பிறகும் கூட இந்த நடைமுறை மாறி பழைய பாரம்பரியம் காக்கப்படவில்லை.

இதனை மாற்ற வேண்டும் என்றும், தீபத் தூணில் தான் தீபம் ஏற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்து முன்னணி பல ஆண்டுகளாக மக்கள் போராட்டமாக நடத்தி வருகிறது.

நீதிமன்ற உத்தரவு

இந்து முன்னணியின் மாநிலத் தலைவராக இருந்த அமரர் மாவீரன் அட்வகேட் ராஜகோபாலன் பல ஆண்டுகள் தொடர்ந்து போராட்டத்திற்கு தலைமையேற்று போராடினார். மேலும் சட்டரீதியான போராட்டமும் நடத்தி மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிமன்றத்தின் உத்தரவையும் பெற்றார்.

ஆனால் துரதிருஷ்டமாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி பல ஆண்டுகள் ஆகியும் கோவில் நிர்வாகமும், இந்து சமய அறநிலையத்துறையும் நீதிமன்ற உத்தரவையையும் மதிக்கவில்லை, பக்தர்களின் உணர்வுகளையும் ஏற்காமல் அலட்சியம் செய்து வருகிறது.

திருக்கார்த்திகை தினத்தில் தீபம்

இந்நிலையை மாற்ற முருக பக்தர்கள் எல்லா தலங்களிலும் கார்த்திகை தீபத்தை கொண்டாடுவது போல முருகனின் முதல்படை வீடாகத் திகழும் திருப்பரங்குன்றம் மலைமீதான தீபத்தூணில் திருகார்த்திகை தீபத்தை ஏற்றிடுவோம் வாருங்கள் என்று இந்து முன்னணி அறைகூவல் விடுக்கிறது.

வழிபாடு நமது உரிமை. அதிலும் சட்டத்தின்படி நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. திருகார்த்திகை தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை கோவில் நிர்வாகம் அலட்சியப்படுத்துவது கண்டிக்கத்தக்கது.

எனவே வருகின்ற திருக்கார்த்திகை தினத்தில் திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்தூணில் தீபம் ஏற்றிட முருக பக்தர்கள் பெருந்திரளாக வருகைதர வேண்டுகிறோம். தீபத்தூணில் தீபம் ஏற்றி நமது பாரம்பரிய திருவிழாவை கொண்டாடுவோம். இதற்கு முருகன் அடியார்கள், ஆன்மீக குழுக்கள், பாதயாத்திரை குழுக்கள், காவடி குழக்கள், ஆன்மீக பெரியோர்கள் அனைவரையும் வரவேற்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+