மதுரையில் “ரெடி”.. பெயர் “கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம்”தான் - தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசானை
மதுரை: தமிழ்நாடு அரசு மதுரையில் கட்டி வரும் நூலகத்தின் பெயரை "கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம்" என்று வைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு இருக்கிறது. ஏற்கனவே இந்த பெயரை கொண்டு நூலகம் அமைக்கப்படுவதாக அரசு தெரிவித்தாலும் தற்போதே அதன் பெயர் அதிகாரப்பூர்வமாகி உள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்த முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மதுரையில் முன்னாள் முதலமைச்சரும் திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதி பெயரில் நூலகம் அமைக்க உள்ளதாக அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக மதுரை புதுநத்தம் சாலையில் பொதுப்பணித்துறை கட்டிட வளாகத்தில் நூலகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.

அங்கு ரூ.99 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் என்ற பெயரில் தமிழ்நாடு அரசு நூலகத்தை கட்டி வருகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 6 தளங்களை கொண்ட இந்த நூலக கட்டிடம் 2 லட்சத்து 40 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது.
இந்த நூலகத்தில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தைபோல் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழி நூல்கள், இலக்கியம், கலை, அறிவியல், சட்டம், வரலாறு, கணினி, தொழில்நுட்பம், விண்வெளி, புவியியல், மத்திய, மாநில அரசு பணித்தேர்வுகளுக்கான நூல்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த புத்தகங்கள் இடம்பெற உள்ளன.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் இங்கு நூல்கள் இரவல் வழங்கப்படுவதுடன், குறிப்புதவி செய்யும் நூலமாகவும் இது செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு மக்களுக்குமான நூலக வசதிகள் இதில் கொண்டு வரப்படும் என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு ஜுன் மாதம் மதுரை சென்றபோது கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலக பணிகளை ஆய்வு செய்தார். நூலகத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்ட 6 மாத காலத்திற்குள் 80 சதவீதம் அளவுக்கு பணிகள் நிறைவடைந்து இருப்பதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தற்போது மதுரை நூலகத்தின் பெரும் பங்கு பணிகள் நிறைவடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் சட்டசபையில் பேசிய தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், கலைஞர் நூற்றாண்டுத் தொடக்க நிகழ்வாக கலைஞர் நூற்றாண்டு நூலகம் ஜூன் மாதம் திறக்கப்படும் என்று அறிவித்தார். இந்த நிலையில் இந்த நூலகத்திற்கு, "கலைஞர் நூற்றாண்டு நூலகம்" என்ற பெயர் அதிகாரப்பூர்வமாக வைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications