"தீட்டு என்பதே மனித குலத்துக்கு எதிரானது”.. திருப்பரங்குன்றம் வழக்கில் ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதம்!
மதுரை: தீட்டு என்பதே மனித குலத்துக்கு எதிரானது என்று ஐகோர்ட் மதுரை கிளையில் அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கில் தமிழக அரசு பரபர வாதங்களை முன்வைத்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பாக மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் இஸ்லாமியர்கள் கந்தூரி கொடுப்பதை எதிர்த்து இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சிக்கந்தர் பாதுஷா தர்காவில் ஆடு, கோழியுடன் ஏறக் கூடாது என்று காவல்துறை தரப்பில் உத்தரவிடப்பட்டது சர்ச்சையாக வெடித்தது.

திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தமானது மற்றும் நில பயன்பாடு தொடர்பான வழக்குகள் உள்ளன. ஒரு தரப்பினர் மலையை சமணர் குன்று என்று அறிவிக்கக் கோரியும், மற்றொரு தரப்பினர் கோயிலுக்கு சொந்தமானது என்று வாதிட்டனர்.
இந்த வழக்கு ஏற்கனவே உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தபோது, ஒன்றிய தொல்லியல் துறையிடம் இது தொடர்பாக மனு அளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டிருந்தது. ஆனால் மத்திய தொல்லியல் துறை அதிகாரிகளிடம் இது தொடர்பாக மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுதாரர் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கில் 3வது நீதிபதி விஜயகுமார் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. சிக்கந்தர் மலை என்று அழைப்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? ஆடு, கோழி பலியிடுவதற்கு, கந்தூரி நடத்துவதற்கு அனுமதி உண்டா. நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த அனுமதி இருக்கிறதா என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
நீதிபதியின் கேள்விகளுக்கு வருவாய் ஆவணங்களுடன் அரசு தரப்பில் ஐகோர்ட் கிளையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தீட்டு என்பதே மனித குலத்துக்கு எதிரானது. தீட்டு என்பது ஜாதியிலோ, மதத்திலோ, மனிதர்களுக்கு உள்ளேயோ இருக்கவே கூடாது என்று அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.
மலையில் ஆடு, கோழி பலியிடுவதால் புனிதம் கெட்டு, தீட்டுப்படும்" என மனுதாரர்கள் தரப்பு வாதம் செய்தனர். அதற்கு, அழகர் கோயிலில் பதினெட்டாம்படி கருப்புக்கு கிடா வெட்டிய பிறகுதான் பெருமாளை பக்தர்கள் தரிசிக்கின்றனர். அப்படி இருக்கையில் இது எப்படி தீட்டாகும்? என்றும் அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.
இதையடுத்து மத்திய தொல்லியல் துறை தரப்பு வாதங்களுக்காக வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
போலீஸே உடலை அடக்கம் பண்ணிடும்! ஆகாஷ் வழக்கில் நீதிமன்றம் எச்சரிக்கை! விடாப்பிடியாய் பெற்றோர்! பரபர -
100 நாள் ஆச்சு.. இன்று மாலைக்குள் ஆகாஷ் உடலை வாங்குங்க.. பெற்றோருக்கு கெடு விதித்த ஐகோர்ட்! -
விவாகரத்து வழக்குகளில் பெயர்களை வெளியிடக் கூடாது - உயர்நீதிமன்ற கிளை போட்ட உத்தரவு! - -
3 மாதங்களாக மார்ச்சுவரியில் ஆகாஷ் உடல்..நீதிமன்ற உத்தரவால் 102வது நாளில் தகனம்! உறவினர்கள் அஞ்சலி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்












Click it and Unblock the Notifications