மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்னும் நிலத்தை முழுமையாக தரவில்லை.. வெங்கடேசன்
Recommended Video
மதுரை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிலத்தை தமிழக அரசு ஒப்படைக்கும் பணி இன்னும் முழுமை அடையவில்லை என்று மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
நடிகர் சிவாஜி கணேசன் 18வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் நடிகர் சிவாஜி கணேசன் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மகா கலைஞன், மகா நடிகன் சிவாஜி கணேசன் நினைவு நாளில் அஞ்சலி செலுத்தி மதுரை தனது மகத்தான கலைஞனை நினைவு கூர்கிறது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ மனைப் பணிகளை விரைவுப் படுத்த இரு முறை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்து வலியுறுத்தி உள்ளேன். 3 ஆண்டுகளில் நிச்சயம் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.
இன்னும் தமிழக அரசு, நிலத்தை ஒப்படைக்கும் பணி முழுமை அடையாமல் உள்ளது. விரைந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிலத்தை ஒப்படைக்க வேண்டும்.
கீழடி 5ம் கட்ட அகழாய்வு பணிகள் குறித்து அடுத்த வாரம் பார்வையிட உள்ளேன். மதுரையை சுற்றி நரசிங்கம்பட்டி போன்று பரந்து விரிந்து புதைந்து கிடக்கின்ற பல்வேறு இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள தேவையான முயற்சிகளை வருங்காலங்களில் எடுப்போம் என்று தெரிவித்தார்.
-
Maridhas Arrest: யூடியூபர் மாரிதாஸ் கைது! மதுரை வீட்டில் குவிந்த சைபர் கிரைம் போலீஸார் -
தன் உயரத்திற்கு அரிவாள் காணிக்கை... கருப்பசாமி கோவிலில் மனைவியுடன் சிவகார்த்திகேயன்.. பின்னணி என்ன? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications