வெறி பிடித்த நாய் குலைப்பதற்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது.. எச் ராஜா குறித்து பிடிஆர்
மதுரை: வெறிபிடித்த நாய் குலைப்பதற்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது என்று பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா குறித்த கேள்விக்கு தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார்.
கோவில்களை தனியாரிடம் ஒப்படைக்கும் விவகாரத்தில் ஈஷா யோகா மையம் நடத்தி வரும் ஜக்கி வாசுதேவ் குறித்து சில விமர்சனங்களை முன்வைத்திருந்தார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். இது சமூக வலைதளங்களில் சர்ச்சையானது.

பிடிஆர் குடியுரிமை
இதனையடுத்து ஜக்கி வாசுதேவ் குறித்து புதிய தகவல்கள் வரும் வரை தாம் எதுவும் பேசப் போவது இல்லை என கூறியிருந்தார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். இந்த நிலையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் இந்திய குடியுரிமை உள்ளிட்ட விவகாரங்களை சிலர் கேள்விக்குள்ளாக்கினர்.

எச்.ராஜா விமர்சனம்
அதேபோல் பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜாவும், ஜக்கி வாசுதேவ் பற்றி அமைச்சர் தியாகராஜன் பேசாமல் வாயை மூட வேண்டும் என்றும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் பூர்வீகத்தைப் பற்றி பேசுவோம் என்றார். எச். ராஜாவின் இந்த விமர்சனம் தொடர்பாக அமைச்சர் தியாகராஜனிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதில்:

மனிதர்களின் விமர்சனம்
நான் புதுசாக பொறுப்பேற்றிருக்கிறேன். நாங்கள் 5 ஆண்டுகாலம் சிறப்பாக செயல்படப் போகிறோம். நான் ஒரு அடிப்படை கருத்து சொல்லப் போகிறேன். தயவு செய்து இதை நல்ல எண்ணத்துடன் இதனை எடுத்துக் கொள்ளுங்கள். யாரிடம் எந்த கருத்தை எந்த நேரத்தில் எடுத்து வெளியிடுவது என்பதற்கு அடிப்படையான ஒருலிமிட் வேண்டும். தயவு செய்து மனிதன் பேசுகிற, தகுதியுள்ள மனிதன் பேசுகிற விமர்சனம், கேள்விகள், கோரிக்கைகளுக்கு பதில் சொல்கிறேன்.

வெறிபிடிச்ச நாய் குலைக்கிறதுக்கு...
வெறிபிடிச்ச நாய் குலைக்கிறதுக்கு எல்லாம் என்கிட்ட வந்து கேட்டீங்கன்னா.. நான் நாட்டின் அமைச்சர். எதுக்கு பதில் சொல்லனும்? எதில் சொல்ல கூடாதுன்னு இருக்கு.. தயவு செய்து இந்த மாதிரி நாய் குலைக்கிறதுக்கு எல்லாம் பதில் சொல்ல மாட்டேன். இவ்வாறு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
-
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
அப்துல்கலாம் பெயரில் அரசியல் பயிற்சி மையம்.. முதலில் பயிற்சி.. அப்புறம் பதவி.. அறிவித்த அண்ணாமலை! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு












Click it and Unblock the Notifications