TNPSC குரூப் 1 தேர்வில் போலி சான்றிதழ்.. மதுரை கோர்ட் கண்டனம்.. லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கெடு
மதுரை: 2019ம் ஆண்டு குரூப்-1 தேர்வில் போலிச் சான்று கொடுத்த முறைகேடு செய்த வழக்கை விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மீண்டும் கால அவகாசம் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது... அத்துடன், வெற்றி பெற வேண்டுமென்ற கனவோடு கண் விழித்து விளக்கு வெளிச்சத்தில் பலர் படிப்பதாகவும், சிலர் குறுக்கு வழியில் வெல்வதாகவும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த சக்திராவ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், "தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2019-ல் நடத்திய குரூப் 1 தேர்வில், தொலை நிலைக் கல்வியில் பயின்றவர்களுக்கு, தமிழ் வழிக்கல்வி பயின்றவர்களுக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டு சலுகை வழங்கப்பட்டது.

சட்டவிரோதம்: தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கான 20 சதவீத இடஒதுக்கீடு, தொலை நிலைக் கல்வியில் பயின்றவர்களுக்கு வழங்குவது சட்டவிரோதம். இந்த வழக்கில் தமிழக அரசு மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு உயர் நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. ஆனால், அந்த உத்தரவுகளை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை. ஆகையால், அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் பி.வேல்முருகன், பி.புகழேந்தி ஆகியோர் விசாரித்தனர். அப்போது, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தாக்கல் செய்த அறிக்கையில், "மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் படித்த 4 பேர் போலியான சான்றிதழ்களை அளித்துள்ளனர். அவர்கள் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சான்றிதழ்கள்: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், மெட்ராஸ் பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்ட தமிழ் வழி சான்றில் பிரச்சனை இல்லை. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயின்று 16 நபர்கள் சான்றிதழை சமர்ப்பித்துள்ள நிலையில், அவர்களின் 3 நபர்கள் மீது சந்தேகம் உள்ளது. இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நீதிபதிகள், "நம்முடைய இந்தியாவில், லட்சக்கணக்கான ஏழை மாணவர்கள் குரூப்-1 தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற கனவோடு இரவு நேரங்களில் கண் விழித்து விளக்கு வெளிச்சத்தில் மிகவும் சிரமப்பட்டு படித்து தேர்வுகளை எழுதுகின்றனர். இதுபோன்று குறுக்கு வழியில் போலியான சான்று வழங்கி தேர்வு எழுதி வெற்றி பெறுவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது சட்ட விரோதமானது. இது ஏழை மாணவர்களின் கனவை புதைக்கும் செயலாகும்.
கால அவகாசம்: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை தவிர பிற பல்கலைக்கழகங்களில் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பதிவாளரும் விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 2 மாத அவகாசம் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு வழங்கப்படுகிறது. இந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை முறையாக நடைமுறைப்படுத்தியது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி முதல் வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications