மதுரையில் ரயிலில் தீ விபத்து: கள்ளச்சந்தையில் வாங்கிய சிலிண்டர் தான் காரணமா? வெளியான திடுக் தகவல்!
மதுரை: மதுரையில் சுற்றுலா ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட கள்ளச்சந்தையில் வாங்கிய சிலிண்டர் தான் காரணம் என்று விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது.
உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து ராமேஸ்வரம் செல்வதற்காக பயணிகள் பலர் சுற்றுலா ரயிலில் தமிழகம் வந்திருந்தனர். இந்த ரயில் கடந்த 25 ஆம் தேதி இரவு மதுரை ரயில் நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கி.மீ தொலைவில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று முன் தினம் அதிகாலை அந்த ரயில் பெட்டியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி உத்தர பிரதேசத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர்.

இதேபோல சிலர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து ஒரு ரெயில் பெட்டியை வாடகைக்கு பிடித்து 63 பேர் கொண்ட குழுவினர் தங்களுடன் 5 சமையல்காரர்களையும் அழைத்து வந்து இருக்கிறார்கள். அதிகாலை 5.15 மணி அளவில், அந்த குழுவினருடன் வந்த சமையல்காரர்கள் ரயில் பெட்டிக்கு உள்ளேயே ஓரிடத்தில் கியாஸ் அடுப்பை பற்ற வைத்து டீ போட்டுள்ளனர்.
அப்போது தான் சிலிண்டர் வெடித்து தீ பிடித்து விபத்து ஏற்பட்டதாக தெற்கு ரயில்வே தரப்பு தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் நாசேவேலை எதுவும் இல்லை என்றும் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் உறுதி செய்தனர். இதனிடையே, ரயில் தீ விபத்து தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி நேற்று விசாரணை நடத்தினார். மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலக மாநாட்டு அரங்கில் விசாரணை நடைபெற்றது.
இரண்டாவது நாளாக இன்றும் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் விசாரணை மேற்கொண்டுள்ளார். சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்து இருந்த நிறுவனத்தின் ஊழியர்களே சிலிண்டரை எடுத்து வந்தததாக சொல்லப்படுகிறது. எனவே, அவர்களுக்கு சிலிண்டர் கொடுத்தது யார்? எந்த ரயில் நிலையத்தில் வைத்து சிலிண்டரை ஏற்றினார்கள் என்ற அடிப்படையில் விசாரணை நடைபெற்றது.
மதுரையில் சுற்றுலா ரயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட கள்ளச்சந்தையில் வாங்கிய சிலிண்டர் தான் காரனம் என்று விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. இதில் 5 பேர கைது செய்துள்ளனர். 5 பேரும் சம்மந்தப்பட்ட சுற்றுலா நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ஆவர். அதில் 2 பேர் சமையல் காரர்கள், இவர்கள் லக்னோவில் இருந்து வரும் போதே இரண்டு சிலிண்டர்களை கொண்டு வந்து இருக்கிறார்கள்.

அதேபோல், அடுப்புகளும் விறகுகளும் கொண்டு வந்து இருக்கிறார்கள். மண்ணெண்ணெயும் கொண்டு வந்து இருக்கிறார்கள். கன்னியாகுமரியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது சட்ட விரோதமாக சிலிண்டர் வாங்கியிருக்கிறார்கள். கள்ளசந்தையில் வாங்கிய சிலிண்டரில் கசிவு இருந்ததாகவும் அதை வைத்து சமைக்கும் போதுதான் இந்த அசம்பாவிதம் நடைபெற்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சுற்றுலா நிறுவன ஊழியர்களிடம் ரயில்வே காவல் துறை நடத்திய விசாரணையில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. அவர்கள் யாரிடம் இருந்து வாங்கினார்கள் என்பது குறித்து விசாரணை நடப்பதாக தெரிகிறது. தற்போது சுற்றுலா நிறுவன ஊழியர்கள் 5 பேரிடமும் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலைக்குற்றம் ஆகாத மரணத்தை விளைவிக்கும் குற்றத்தை செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications