லெஃப்ட் ரைட் வாங்கிய ஐகோர்ட் நீதிபதி.. அடுத்த அரை மணி நேரத்தில் அலறியடித்து ஆர்டர் போட்ட அதிகாரிகள்!
மதுரை: கருணை அடிப்படையில் பணி கோரியவரை முதலில் தற்காலிக ஊழியராக நியமித்த நிலையில், நீதிபதியின் கடும் எச்சரிக்கையால் அடுத்த அரை மணி நேரத்தில் நிரந்தர பணியில் நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது போக்குவரத்து கழகம்.
கரூர் மாவட்டம் குளித்தலை தோகைமலையைச் சேர்ந்தவர் அமிர்தவள்ளி. இவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், தனது கணவர் கருப்பையா, கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்தபோது உயிரிழந்ததாகவும், தனது கணவருக்கு சேர வேண்டிய பணப்பலன்கள் மற்றும் கருணைப் பணி கேட்டு மனு அளித்தேன் என்றும் ஆனால் அவர் தற்காலிக பணியாளராக தான் இருந்தார் எனக் கூறி கருணை பணி வழங்க முடியாது என்று எனது கோரிக்கையை நிராகரித்து விட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், தான் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், மனுவை விசாரித்த நீதிபதி, என் கணவர் 427 நாட்கள் பணியாற்றியிருப்பதால், அவரை நிரந்தர பணியாளராகவே கருத வேண்டும் என்றும் இதனால் பணப்பலன் மற்றும் கருணை பணி வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்த உத்தரவை நிறைவேற்றாததால் போக்குவரத்து கழக அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது நீதிமன்ற உத்தரவு 3 ஆண்டுகளாக நிறைவேற்றப்படவில்லை. நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் ஏதோ ஒரு அலுவலக உத்தரவு போல் நினைக்கின்றனர். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்படும். நீதிமன்ற உத்தரவின்படி 2 நாளில் கருணை பணி வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த மனு, நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் மோகன், பொது மேலாளர் இளங்கோவன் ஆகியோர் ஆஜராகி, உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கருணை அடிப்படையில் கருப்பையாவின் மகன் தினக்கூலி பணியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்தனர்.
மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஏ.ராகுல் வாதிடுகையில், புதுக்கோட்டை மண்டலத்தில் மட்டும் 183 நடத்துநர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆனால் மனுதாரரின் மகனுக்கு இளவரசுவுக்கு தற்காலிக பணிதான் வழங்கப்பட்டுள்ளது. மனுதாரரின் மகனை நிரந்தர பணியில் நியமிக்க வேண்டும் என வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதி, உயிரிழந்த ஊழியரின் சட்டப்பூர்வ வாரிசுக்கு உடனடியாக கருணை அடிப்படையில் நிரந்தர பணி வழங்க வேண்டும். இல்லையெனில் நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்கும் என எச்சரித்தார். இந்த எச்சரிக்கையை தொடர்ந்து அடுத்த அரை மணி நேரத்தில் மனுதாரரின் மகனை கருணை அடிப்படையில் நடத்துநராக நியமித்து உத்தரவு வழங்கப்பட்டது.
இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் கருணைப் பணி பெற்றவர்களை அதிகாரிகள் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது. வறுமையில் வாடுவோருக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். கருணைப் பணி பெற்றவர்கள் மீது எந்த வன்மத்தையும் காட்டக்கூடாது எனக் கூறி, இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார்.
-
அண்ணா நகர் சிறுமி வழக்கு.. தினமும் விசாரணை நடத்தி விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு! -
இயக்குநர் ஷங்கர் சொத்து முடக்கப்பட்டதற்கு விதிக்கப்பட்ட தடை.. சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications