9 முறை அதிமுக வென்ற ஆண்டிபட்டியில் தினகரன் போட்டி? அதிமுகவுக்கு சவால்விடுகிறாரா?
ஆண்டிபட்டி: அதிமுகவின் கோட்டையான ஆண்டிபட்டி சட்டசபை தொகுதியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடக் கூடும் என கூறப்படுகிறது. டிடிவி தினகரன் போட்டியிடலாம் என்பதால் அமமுகவினர் தேர்தல் பணிகளில் படுதீவிரமாக உள்ளனர்.
சட்டசபை தேர்தலுக்குள் அமமுக- அதிமுக இணையாது என்பதாகவே களநிலவரம் உள்ளது. இதனால்தான் தினகரன், தாம் ஆர்.கே. நகர் மற்றும் தேனிமாவட்ட தொகுதி ஒன்றில் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார்.

அதிமுக கோட்டை
தேனி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் ஆண்டிபட்டி தொகுதிதான் அதிமுகவின் கோட்டையாக இருக்கிறது. இந்த தொகுதியில் 9 முறை அதிமுக வெற்றி பெற்றிருக்கிறது.

எஸ்.எஸ்.ஆர்- எம்ஜிஆர்-ஜெ.
1980-ல் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், 1984-ல் எம்ஜிஆர், 2002, 2006-ல் ஜெயலலிதா ஆகியோர் வெற்றி பெற்ற தொகுதி இது.

3 முறை வென்ற தங்க தமிழ்ச்செல்வன்
இந்த தொகுதியில் தங்க தமிழ்ச்செல்வன் அதிமுக வேட்பாளராக 3 முறை களம் கண்டு வாகை சூடினார். தினகரனோடு இருந்த தங்க தமிழ்ச்செல்வன் இப்போது திமுகவில் இருக்கிறார். இருந்த போதும் அதிமுக வாக்கு வங்கி வலிமையாக இருக்கிறது என்கிறார்கள் கள நிலவரம் அறிந்தவர்கள். இதனால்தான் தினகரன் இந்த தொகுதியை தேர்ந்தெடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

தினகரன் கணக்கு
ஆண்டிபட்டியில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் அதிமுக தலைமைக்கு தமது வலிமையை காட்டலாம் என்பதும் தினகரனின் கணக்காம். டிடிவி தினகரன், ஆண்டிபட்டியில் போட்டியிடுவார் என்பதால் அமமுகவினர் இப்போதே தேர்தல் பணிகளில் படுதீவிரமாக இருக்கிறார்களாம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications