விஜயகாந்த், ரஜினி, எம்ஜிஆர்.. அடுத்தவங்களை நம்பியே எத்தனை நாளைக்கு? விஜயை விளாசும் நெட்டிசன்ஸ்
மதுரை: நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜய் தனது கட்சியின் இரண்டாவது மாநில மாநாட்டை நாளை மதுரையில் நடத்துகிறார். மாநாட்டு மேடையில் விஜய்க்கு பின்னணியில் எம்ஜிஆர், அண்ணா இருப்பது போல பிரம்மாண்ட பதாகை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் சினிமாவிலும் அரசியலிலும் விஜய் கடைசி வரை அடுத்தவர்களை நம்பி தான் இருக்க வேண்டிய நிலை இருப்பதாக விமர்சிக்கின்றனர். மேலும் எம்ஜிஆர் அண்ணா புகைப்படங்களை பயன்படுத்தியதற்கு அதிமுகவும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருவது தமிழகத்தில் ஒன்றும் புதிதல்ல. தமிழகத்தை ஆண்ட முதலமைச்சர்கள் கடைசி 50 ஆண்டுகளில் சினிமாவில் இருந்து வந்தவர்கள் தான். எழுத்தாளர், கவிஞர் என பல்வேறு முகங்கள் கொண்ட அறிஞர் அண்ணா திமுகவை தோற்றுவித்து தமிழ்நாட்டின் முதல் திராவிட கட்சியின் முதலமைச்சரானார்.
அவருக்கு பிறகு கதை வசனகர்த்தாவான கலைஞர் தமிழ்நாடு முதலமைச்சர் பதவியேற்றார் அதற்குப் பிறகு எம்ஜிஆர், ஜானகி, ஜெயலலிதா என பதவிக்கு வந்தவர்களில் கிட்டத்தட்ட அனைவருமே சினிமா பின்னணியை கொண்டவர்கள் தான். ஓபிஎஸ், எடப்பாடி உள்ளிட்டோர் விதிவிலக்கு.

விஜய் அரசியல்
எம்ஜிஆர் ஏற்படுத்திய மிகப்பெரிய அரசியல் மாற்றத்தின் காரணமாக ஏராளமான நடிகர்கள் கட்சி தொடங்கினர். அந்த வகையில் விஜயகாந்த், சிவாஜி, பாக்கியராஜ், டி ராஜேந்தர், சரத்குமார் என பலரை சொல்லலாம். அப்படி சமீபத்தில் அரசியலுக்கு வந்தவர் விஜய். ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றிய போதே விஜய் அரசியலுக்கு வருவது உறுதி என சொல்லப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு தமிழக வெற்றி கழகத்தை நிறுவினார்.
மதுரை மாநாடு
முதல் மாநாடு விழுப்புரம் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் தற்போது இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் நாளை நடைபெற இருக்கிறது. ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகளில் நிர்வாகிகள் ஈடுபட்டு இருக்கின்றனர். மாநாட்டில் குறிப்பிடத்தகுந்த விதமாக மாநாட்டு மேடையில் எம்ஜிஆர், அண்ணா புகைப்படங்களுடன் விஜயின் புகைப்படமும் இடம் பெற்று இருக்கிறது.
எம்ஜிஆர் அண்ணா புகைப்படம்
கடந்த முறை முதல் மாநில மாநாடு நடைபெற்ற போது கொள்கை தலைவர்கள் ஆன தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், கர்மவீரர் காமராஜர், அஞ்சலை அம்மாள், வீரமங்கை வேலு நாச்சியாரின் பிரம்மாண்ட கட்டவுட்டுகள் மாநாட்டு மேடை அருகே அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மதுரையில் மாநாடு நடைபெறும் நிலையில் மாநாட்டு மேடையில் மிக பிரம்மாண்டமான முறையில் விஜயின் புகைப்படம் அவருக்கு பின்னணியில் எம்ஜிஆர் அண்ணாவும் இருப்பது போல அமைக்கப்பட்டு இருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகம்
கொள்கை தலைவர்களாக அண்ணாவையும் எம்ஜிஆரையும் அறிவிக்காத விஜய் மதுரை மாநாட்டின் போது மட்டும் ஏன் அவர்களது புகைப்படத்தை பயன்படுத்துகிறார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. எம்ஜிஆர் அண்ணாவின் புகைப்படத்தை பயன்படுத்தும் தகுதி விஜய்க்கு இல்லை என அதிமுக கண்டனமும் தெரிவித்து இருக்கிறது. திமுக தரப்பிலும், பொது வெளியிலும் விஜயின் இந்த செயலுக்கு கண்டனம் எழுந்து வருவதை பார்க்க முடிகிறது.

விஜயகாந்த்
இது ஒரு புறம் இருக்க அரசியலில் மட்டுமல்ல சினிமாவிலும் விஜய் அடுத்தவரை நம்பித்தான் பயணித்தார் என்கின்றனர். இளம் வயதிலேயே தந்தையால் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட அவர் அடுத்தடுத்து தோல்வி படங்களையே ரிலீஸ் செய்தார். இதை அடுத்து அவருக்கு ஒரு வெற்றி தேவைப்பட்ட நிலையில் செந்தூரப்பாண்டி தம்பி என சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுத்தார். அதற்கு அடுத்த சில படங்களில் விஜயகாந்தின் ரெஃபரன்ஸ் விஜய்க்கு தேவைப்பட்டது.
ரஜினிகாந்த் எம்ஜிஆர்
பின்னர் ஓரளவு வளர்ந்ததும் நடிகர் ரஜினிகாந்தை பயன்படுத்த தொடங்கினார் விஜய். சூப்பர் ஸ்டார் தம்பி, சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகன், அண்ணாமல தம்பி நான் என அவ்வப்போது ரஜினியின் புகைப்படங்களையும் அவரது வசனங்களையும் விஜய் பயன்படுத்தினார். கிட்டத்தட்ட மெர்சல் வரை தன்னை ஒரு ரஜினி ரசிகனாகவே விஜய் காட்டிக் கொண்டார். மெர்சல் படத்தில் தான் எம்ஜிஆரின் ரெஃபரன்ஸ் வரத் தொடங்கியது. அதற்குப் பிறகு பிகில் உள்ளிட்ட படங்களில் எம்ஜிஆர் பாடல்களை விஜய் பயன்படுத்த தொடங்கினார். இப்படியாக விஜயகாந்த் ரஜினி, எம்ஜிஆர் என அடுத்தவர்களின் ரெஃபரன்ஸை தனது படத்தில் பயன்படுத்தி வந்த விஜய் அரசியலுக்கு வந்த நிலையிலும் எம்ஜிஆரின் ரெஃபரன்ஸை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது என விமர்சிக்கின்றனர் அதிமுகவினர்.
-
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
கட்டம் கட்டிய திமுக.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை.. கலங்கி வீடியோ வெளியிட்ட தவாக வேல்முருகன் -
தவெக சார்பாக களமிறங்கும் அன்புச்செழியன் மகன்.. மதுரை மத்திய தொகுதியில் விவேக் அன்புச்செழியன்? -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா! -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
தேதி குறிச்சாச்சு.. மேடையேறும் விஜய்.. மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
என்னது நாங்க தவெகவை கூட்டணிக்கு அழைத்தோமா.. கடுகடுத்த செல்லூர் ராஜூ












Click it and Unblock the Notifications