ஷாருக்கான் மீது வழக்கு போட்டீங்களா? புஸ்ஸி ஆனந்த் மேல மட்டும் ஏன்? தவெக தரப்பு வாதம்
மதுரை: நடிகர் ஷாருக்கான் அனுமதியின்றி கூட்டத்தில் உயிரிழப்பு ஏற்பட்ட போது அவர் மீது வழக்குப் பதிவு செய்யவில்லை. அப்படியிருக்கும் போது கரூர் வழக்கில் மட்டும் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் மீது மட்டும் ஏன் என தவெக தரப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீன் கோரி புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோர் தாக்கல் செய்த வழக்கில் விசாரணை நடந்து வருகிறது. அதில் தவெக தரப்பு முன் வைத்த வாதத்தில் கரூரில் விஜய் பரப்புரைக் கூட்டத்தில் ரவுடிகள் புகுந்துள்ளனர்.

காவல்துறை ஏன் தடியடி நடத்தியது. விஜய் பரப்புரைக்கு காலியான ஆம்புலன்ஸ் வந்தது ஏன், எதற்காக தவெக பொதுச் செயலாளர் மீது எப்படி வழக்குப் பதிவு செய்ய முடியும்? கூட்டத்தை கட்டுப்படுத்துவது அரசின் கடமைதான். எங்களுக்கு சம்பந்தமில்லை.
கரூரில் 41 பேர் பலி தொடர்பாக எங்கள் மீது காவல் துறையால் புனையப்பட்ட வழக்கு. நடந்த சம்பவத்தில் மாநில அரசுக்கும் பொறுப்பு உள்ளது. எங்கள் மீது வழக்கு தொடர்ந்ததில் காவல் துறைக்கு உள்நோக்கம் உள்ளது. எங்களுக்கு அறிவுரை கூறியதாக எஃப்ஐஆரில் கூறியுள்ள காவல் துறை என்ன அறிவுரை என கூறவில்லை.
நடிகர் ஷாருக்கான் அனுமதியின்றி கூட்டிய கூட்டத்தில் உயிரிழப்பு ஏற்பட்ட போது அவர் மீது வழக்குப் பதிவு செய்யவில்லை. அவ்வாறு இருக்கும் போது புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என தவெக தரப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரிய மனுக்கள் மீது இன்று மாலை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
கடதந் 2017ஆம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான ரயிஸ் திரைப்படத்தின் அறிமுக விழா வதோதரா ரயில் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது ஷாருக்கான் ரயிலில் வந்து ரசிகர்களை காண்பது போல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது அவரை காண ரசிகர்கள் கூட்டம் வதோதரா ரயில் நிலையத்தில் அலைமோதியது. இதில் ரசிகர் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானார். மேலும் பலர் காயமடைந்தனர்.
-
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
234 மாவட்ட செயலாளர்.. விஜய் எடுக்கும் புதிய வியூகம்.. நிர்வாகிகளுக்கு போன மெசேஜ்.. பின்னணி என்ன? -
அமைச்சரவையில் இடம்.. இதனால்தான் விஜய்யை ஆதரித்தோமா? ஐயுஎம்எல் காதர் மொய்தீன் விளக்கம்! -
எம்ஜிஆர், ஜெயலலிதா போலவே விஜய்யும்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் என்ன ஸ்பெஷல்? -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
யார் திட்டத்திற்கு யார் ஸ்டிக்கர் ஒட்டறது.. நிதி ஆயோக் கூட்டம்.. விஜய் மீது உதயநிதி விமர்சனம் -
அம்மா கொடுத்த அனுமதி.. ரஜினியை போல் விஜய்யும் எனக்கு நெருக்கம்.. ராகவா லாரன்ஸ் சொன்ன வார்த்தை! -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
திருச்சி, கோவை, சென்னை.. அடியோடு மாறப்போகுது.. விஜய்யின் 5 மாஸ்டர்பிளான்.. டெல்லியில் பேசியது என்ன? -
1.5 டிரில்லியன் டாலர் இலக்கு.. ஸ்டாலின் வைத்த டார்கெட்டை உயர்த்திய விஜய்.. மோடியிடம் சொன்னது என்ன? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
விஜய்யை அவமானப்படுத்திய கர்நாடக காங்., அமைச்சர் யுடி காதர்? வரவேற்க போய் பூங்கொத்து கூட கொடுக்கலையே!












Click it and Unblock the Notifications