ஜூன் 8ல் மதுரை வரும் அமித் ஷா.. தென் மாவட்ட நிர்வாகிகளுடன் நடக்கும் மீட்டிங்! ஓபிஎஸ் உடன் சந்திப்பு?
மதுரை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 8ஆம் தேதி மதுரை வரவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த பயணத்தின் போது பாஜகவின் தென் மாவட்டங்களை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசிக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை சந்திப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கடந்த மாதம் மத்திய உள்துறை அமித் ஷா சென்னை வந்த போது, பாஜகவின் மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்து அறிவித்தார். அப்போது பாஜக கூட்டணியில் இருந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஆகியோரை சந்திக்கவில்லை.

அதிமுக - பாஜக கூட்டணி
ஆனால் பாஜகவினர் அமமுக மற்றும் ஓபிஎஸ் ஆகியோரும் என்டிஏ கூட்டணியிலேயே இருப்பதாக கூறி வருகின்றனர். ஆனால் இந்த பக்கம் அதிமுக தரப்பில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை சேர்த்து கொள்ளும் எண்ணத்துடன் எடப்பாடி பழனிசாமி இல்லை. அவர் அடுத்தக்கட்ட தேர்தல் பணிகளை தீவிரமாக பார்க்க தொடங்கி இருக்கிறார்.
மதுரை வரும் அமித் ஷா
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ஜூன் 8ஆம் தேதி மதுரைக்கு வரவிருக்கிறார். ஜூன் 8ஆம் தேதி மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் அமித் ஷா கலந்து கொள்ள உள்ளார். அதேபோல் பாஜகவின் தென் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கிறார்.
தென் மாவட்டங்களே குறி
அதுமட்டுமல்லாமல் சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக பாஜக நிர்வாகிகளையும் அமித் ஷா சந்திக்க உள்ளார். அண்மையில் திமுகவின் பொதுக்குழு கூட்டம் மதுரையில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. தற்போது பாஜகவுன் மதுரையில் பொதுக்கூட்டம் நடத்துவது பேசுபொருளாகி இருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென் மாவட்டங்களில் பாஜகவுக்கு அதிகளவிலான வாக்குகள் கிடைத்தன.
ஓபிஎஸ் வருத்தம்
இதனால் பாஜக தென் மாவட்டங்களை மையப்படுத்தி வியூகம் அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் கடந்த முறை சென்னை வந்த போது, ஓபிஎஸ் உள்ளிட்ட நிர்வாகிகளை அமித் ஷா சந்திக்கவில்லை. தங்களை அமித் ஷா சந்திக்காதது வருத்தம் என்பதையும் ஓபிஎஸ் வெளிப்படையாகவே கூறி இருந்தார்.
ஓபிஎஸ் உடன் சந்திப்பு?
இந்த நிலையில் மதுரை பயணத்தின் போது ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் உள்ளிட்டோரை அமித் ஷா சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சட்டமன்றத் தேர்தலில் பாஜக போட்டியிடும் இடங்கள் தொடர்பான முடிவினை எடுக்கவும் அமித் ஷா ஆலோசனை செய்ய வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications