நாளை மாலை வீடுகளில் விளக்கேற்றி கந்த சஷ்டி கவசம் பாடுங்கள்! எல்.முருகன்! என்ன திடீர்னு..?
மதுரை: திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக அரசியல் செய்த திமுகவுக்கு பாடம் கற்பிக்க 23 ஆம் தேதி பக்தர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் வீட்டு வாசலில் விளக்கேற்றி கந்த சஷ்டி கவசம் பாட வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு கார்த்திகை தீபத்தன்று திருப்பரங்குன்றத்தில் உள்ள தீபத்தூணில் விளக்கேற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இது மரபுகளுக்கு எதிரானது என திமுக தரப்பு தெரிவித்தது. உச்சி பிள்ளையார் கோயில் தீபத்தூணை விட்டுவிட்டு சிக்கந்தர் தர்கா அருகே உள்ள தீபத்தூணில் விளக்கேற்ற நீதிபதி உத்தரவிட்டது மத மோதலுக்கு வழி வகுக்கும் என திமுக உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்தன.
இந்த நிலையில் நாடாளுமன்றத்திலும் நீதிபதி சுவாமிநாதனை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என திமுக, தமிழக காங்கி எம்பிக்கள் தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த வழக்கின் மேல்முறையீட்டில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சொன்னது போல் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிடப்பட்டது. 105 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த உத்தரவை ஓரளவு செயல்படுத்தும் விதமாக நாளை மாசி மாத கிருத்திகையையொட்டி வீடுகளில் விளக்கேற்றி, கந்தர் சஷ்டி கவசம் பாடுமாறு மத்தியமைச்சர் எல்.முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுரையில் அவர் கூறியிருப்பதாவது: மதுரைக்கு மார்ச் 1 ஆம் தேதி பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
இந்த கூட்டம் திமுகவை வீட்டிற்கு அனுப்பும் கூட்டமாக இருக்கும். திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பது பக்தர்கள் சார்பாக பல ஆண்டுகளாக வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது. முருக பக்தர்கள் அனைவரும் பல ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். அதை நிறைவேற்றும் விதமாக தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பதவி நீக்கப்பட வேண்டும் என திமுக அரசியல் செய்தது.
திமுகவிற்கு பாடம் புகட்டும் விதமாகவும் தங்களது உணர்வை வெளிப்படுத்தும் விதமாகவும் பக்தர்கள் அனைவரும் தங்களது வீடுகளில் வீட்டு வாசலில் நாளை மாலை விளக்கேற்றி கந்தசஷ்டி கவசம் பாட வேண்டும்.
திமுகவுடன் பிரேமலதா கூட்டணி அமைத்தது, உண்மையிலேயே இந்த கூட்டணியை விஜயகாந்த் ஆன்மா ஏற்றுக்கொள்ளுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. விஜயகாந்தின் மீது மிகப்பெரிய மரியாதை வைத்திருக்கிறோம். அவர் கட்சி ஆரம்பித்தது திமுகவுக்கு எதிராக தான் வாழ்நாள் முழுவதும் திமுகவிற்கு எதிரான அரசியல் செய்து வந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். இவ்வாறு எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
அது போல் திருப்பூரில் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டது குறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: திருப்பூரில் பயங்கரவாதச் சதித்திட்டம் தீட்டிய 8 தீவிரவாதிகள் கைது..!
தமிழகத்தின் பாதுகாப்பை பற்றி துளியும் கவலை இல்லாத திமுக அரசுக்கு கடும் கண்டனம்..!
திருப்பூரில் பயங்கரவாதச் சதித்திட்டம் தீட்டிய 8 தீவிரவாதிகளை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
தீவிரவாதத் தாக்குதல் எனும் கொடூர உச்சத்திற்கு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருப்பது தமிழக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய திமுக அரசு என்ன செய்தது? டெல்லி போலீசார் வந்து கைது செய்யும் வரை தமிழக போலிசார் என்ன செய்துகொண்டு இருந்தனர்?
தமிழகத்தில் தீவிரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த மத்திய என்ஐஏ அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் தமிழக அரசு தீவிரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.
கடந்த 2022ஆம் ஆண்டு, கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பாக பயங்கரவாத தாக்குதலை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து, பலரை கைது செய்து, தீவிரவாதத் தாக்குதல் என்பதை உறுதி செய்தது.
பல்வேறு வெடிபொருள்கள், ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு, 13 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் என அனைத்தும் அம்பலமானது.
ஆனால் குண்டுவெடிப்பு என்பதை ஏற்க மறுத்து சிலிண்டர் வெடிப்பு என்று இன்றளவும் தமிழக முதலமைச்சர் .
ஸ்டாலினும், திமுகவினரும் கூறி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசுக்கு மக்களின் பாதுகாப்பை பற்றி எந்த கவலையும் இல்லை. பயங்கரவாதத்ததை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் நபர்கள், அமைப்புகளுக்கு மறைமுக ஆதரவு அளித்து வருகிறது.
வாக்குவங்கி அரசியலுக்காக மக்களின் பாதுகாப்பை காற்றில் பறக்கவிடும் போலி திராவிட மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுகவைப் போலவே, அவர்களது பங்காளிகளும் இதையே செய்கிறார்கள். கோவை குண்டுவெடிப்பு குற்றவாளிகளை விடுதலை செய்ய கோரி ஓயாது விஷம பிரசாரம் செய்து வருபவர்களும் திமுக கூட்டணி கட்சியினரே.
தமிழக மக்கள் அனைவருமே விழித்துக் கொள்ள வேண்டிய தருணமிது. பயங்கரவாத்திற்கு எதிராகவும், பயங்கரவாதிகளை ஆதரிப்பவர்களுக்கு எதிராகவும் கரம் கோர்த்து மக்கள் செயலாற்ற வேண்டும்.
அனைவரும் வேறுபாடு இல்லாமல் பயங்கரவாதத்துக்கு எதிராக விழிப்புணர்வுடன் ஒன்று சேர்ந்து செயலாற்ற வேண்டும். வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சியினருக்கு தமிழக மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள் என தெரிவித்திருந்தார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications