உதயநிதி கொடுத்த டோஸ்தான்.. நிர்மலா சீதாராமன் தூத்துக்குடி வருகைக்கு காரணம் குறித்து வைகோ விளக்கம்!
மதுரை: தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காட்டமாக விமர்சித்த காரணத்தால்தான் தமிழ்நாட்டின் தூத்துக்குடி வெள்ள பாதிப்புகளை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட வருகை தருகிறார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு நிவாரண நிதியை வழங்க வேண்டும் என்பது கோரிக்கை. இந்த கோரிக்கை தொடர்பாக பேசிய தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உங்க அப்பன் வீட்டு காசையா கேட்கிறோம்? தமிழ்நாட்டு வரி பணத்தைதானே கேட்கிறோம் என்றார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதேபோல டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாஷை சரியில்லை. உதயநிதி அப்படி பேசியிருக்கக் கூடாது என காட்டமாக கூறியிருந்தார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு தமிழ்நாட்டில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த் நிலையில் வரும் டிசம்பர் 26-ந் தேதி தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகளை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்லா சீதாராமனின் டெல்லி பேட்டிக்கு தமிழ்நாட்டு அமைச்சர்கள், தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர்.
இந்த நிலையில் மதுரையில் தந்தை பெரியார் 50-வது நினைவு நாளை முன்னிட்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் வைகோ பேசியதாவது: அண்மைக்காலமாக தந்தை பெரியார் சிலை அவமதிப்பு அதிகரித்துள்ளது. திட்டமிட்டே பெரியார் சிலையை ஒரு கூட்டம் அவமதிப்பு செய்கிறது. நாங்கள் தக்க பதிலடியை தந்து வருகிறோம். பெரியார் சிலையை அவமதிப்போம் என ஒருவர் கூறிவிட்டு அவமதித்தால் கை இருக்காது.
தென் மாவட்ட வெள்ளத்தை மத்திய அமைச்சர் பார்வையிடவில்லை. இதனை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்ட காரணத்தால்தான் தற்போது நிர்மலா சீதாராமன் வரும் 26-ந் தேதி பார்வையிட வருகிறார். இவ்வாறு வைகோ தெரிவித்தார்.
-
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications