மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முல்லை பெரியார், மேகதாது.. அணை கட்டினால் தமிழகம் வறண்டு விடும்.. மதுரையில் பொரிந்து தள்ளிய வைகோ

Google Oneindia Tamil News

Recommended Video

    மோடி வருகைக்கு எதிர்ப்பு... மதுரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு...

    மதுரை: எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவுக்காக மதுரைக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கறுப்பு பலூன்களை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பறக்கவிட்டார்.

    நீட், விவசாயிகள் பிரச்சினை, மீனவர்கள் பிரச்சினை, மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டம், கஜா புயல், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட விவகாரங்களில் பிரதமர் தமிழகத்துக்கு ஆதரவாக நடந்து கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

    இந்த நிலையில் மதுரை தோப்பூரில் நடைபெறும் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

    மதுரை வந்தார் மோடி

    மதுரை வந்தார் மோடி

    அவர் தமிழகத்துக்கு வந்தால் கறுப்பு கொடி காட்டப்படும் என எதிர்க்கட்சிகள் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தன. இந்த நிலையில் இன்று மதுரை விமான நிலையத்துக்கு மோடி வந்தார்.

    மதிமுக போராட்டம்

    மதிமுக போராட்டம்

    அவரது வருகையை கண்டித்து மதிமுக, திமுக, பெரியார் இயக்கங்கள் என கறுப்புக் கொடி போராட்டம் நடத்தியது. அந்த வகையில் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே வைகோ தலைமையிலான மதிமுகவினர் கறுப்புக் கொடிகளை ஏந்தினர்.

    வைகோ பேச்சு

    வைகோ பேச்சு

    இதையடுத்து மோடி மதுரைக்கு வந்துவிட்டார் என்ற தகவல் கேட்டு வைகோ கறுப்பு பலூன்களை பறக்கவிட்டார். அப்போது அவர் பேசுகையில்
    முல்லை பெரியாரில் கேரளா அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

    அணை கட்டினால்

    அணை கட்டினால்

    இந்த அணை கட்டினால் தமிழகத்தில் 5 மாவட்டங்கள் வறண்டுவிடும். அதுபோல் கர்நாடகத்தின் மேகதாதுவில் அணை கட்டினால் வடதமிழகமும் வறண்டு விடும்.

    காப்பாற்றி வரும் போலீஸ்

    காப்பாற்றி வரும் போலீஸ்

    போராட்டத்தை ஒடுக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். எடப்பாடி அரசு போலீஸ் அதிகாரிகளை காப்பாற்றி வருகிறது. இந்த கறுப்பு கொடி போராட்டம் அரசியல் விளம்பரத்துக்காக இல்லை. குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் தமிழகத்தின் டிஜிபியாக வலம் வருகிறார் என்று வைகோ பேசினார்.

    English summary
    Vaiko condemns Centre for allowing Mdam across Mullai Periyar and Mekedatu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X