மதுரை டூ பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் 16 பெட்டிகள்! எக்ஸ்ட்ரா 8 பெட்டியால் சேலம் ஹேப்பி
மதுரை: 8 பெட்டிகள் கொண்ட மதுரை - பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை 16 பெட்டிகளாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் 14 பெட்டிகள் ஏசி சேர் கார், 2 பெட்டிகள் எக்ஸிக்யூடிவ் சேர் கார் ஆகும். இந்த உத்தரவு நாளை அதாவது செப்டம்பர் 11ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பயணிகளின் அதிகப்படியான கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ரயில்வே துறையை நவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு சமீபகாலமாக செயல்பட்டு வருகிறது. ரயில்வே துறையில் மிகவும் அதிவேக ரயிலாகவும், மிகவும் சொகுசான ரயிலாகவும் வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது.

அதிக கட்டணம் - அதிக தேவை
நாட்டின் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், வந்தே பாரத் ரயிலுக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கட்டணம் சற்று அதிகம் என்றாலும், பல்வேறு வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், மதுரை ரெயில் நிலையத்திலிருந்து பெங்களூருவில் கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்துக்கு, கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் 31ந் தேதி வந்தே பாரத் ரெயில் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த வருடம் செப்டம்பர் 2-ந் தேதி முதல், நிரந்தர ரெயிலாக இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
மதுரை - பெங்களூர் வந்தே பாரத்
மதுரை-பெங்களூர் கண்டோன்மென்ட் வந்தே பாரத் ரெயிலை பொறுத்தவரை, 7 சேர்கார் வகுப்பு பெட்டிகளும், ஒரு எக்சிகியூடிவ் வகுப்பு பெட்டியும் இணைக்கப்பட்டிருந்தன. இந்த ரயில் மதுரையில் இருந்து தினமும் அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 1 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட் ரெயில் நிலையம் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் பெங்களூருவில் இருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.40 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது.
வாரந்தோறும் பராமரிப்பு பணிக்காக செவ்வாய்க்கிழமை மட்டும் இந்த ரெயில் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் ஆகிய ஸ்டேஷன்களில் நின்று செல்கிறது.
14 AC Chair Cars , 2 AC Executive
தற்போது, இந்த ரயிலில்தான் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. அதாவது 14 சேர்கார் வகுப்பு பெட்டிகளும், 2 எக்சிகியூடிவ் வகுப்பு பெட்டிகளும் இணைக்கப்பட்டு, 16 பெட்டிகளுடன் கூடிய ரயிலாக மாறியிருக்கிறது.. இந்த ரயில் நாளை முதல் இயக்கப்பட உள்ளது. இதற்கான ரெயில் பெட்டிகள் கோழிக்கோடு ரெயில் நிலையத்தில் இருந்து நேற்றே மதுரைக்கு கொண்டு வரப்பட்டுவிட்டன..
புதியதாக 7 AC Chair Cars மற்றும் 1 AC Executive பெட்டிகள் இணைக்கப்பட்டு, இதன் மூலம் மொத்தம் 14 AC Chair Cars , 2 AC Executive பெட்டிகள் என மொத்தம் 16 பெட்டிகள் இனி மதுரை- வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் இணைக்கப்பட்டுள்ளன.. இந்த ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதால், பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications