டூரிஸ்ட் ஸ்பாட் ஆகும் வண்டியூர் கண்மாய்.. 40 வருட கனவு நிறைவேறப்போகுது... அசந்து போன மதுரைவாசிகள்
மதுரை: சினிமா தியேட்டர்கள் நிறைந்த மதுரையில் பிரம்மாண்டமாக கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டுள்ளது. மதுரைக்காரர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கும் விதமாக வண்டியூர் கண்மாயை ரூ.50 கோடியில் படகு சவாரி உள்பட 12 பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்தி சுற்றுலாத் தலமாக்கும் பணிகளை மாநகராட்சி தொடங்கியுள்ளது. மதுரைவாசிகளின் 40 ஆண்டு கால கனவு விரைவில் நிறைவேறப்போகிறது.
மதுரை மாநகரின் மையத்தில், பெரிய ஏரி போல எப்போதும் தண்ணீர் நிரம்பி காணப்படும் வண்டியூர் கண்மாய், சுற்று வட்டாரக் குடியிருப்புகளின் முக்கிய நீர் ஆதாரமாக திகழ்ந்து வருகிறது. இக்கண் மாய் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த 1982ஆம் ஆண்டில் மதுரையில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் வண்டியூர் கண்மாயை ஆழப்படுத்தி படகு போக்குவரத்து தொடங்கி சிறந்த பொழுதுபோக்கு மையமாக மாற்றப்படும் என அறிவித்தார். ஆனால், தற்போது வரை வண்டியூர் கண்மாயை சிறந்த சுற்றுலா மையமாக மாற்ற அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

மதுரை வண்டியூர் கண்மாய் 550 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. கடந்த காலத்தில் இன்னும் அதிகமான பரப்பில் இருந்த இந்த கண்மாய் தற்போது ஆக்கிரமிப்பால் சுருங்கி வருகிறது. வண்டியூர், கோமதிபுரம், மேலமடை, மானகிரி, தாசில்தார் நகர், அண்ணா நகர், கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர இந்த கண்மாய் நீர் ஆதாரமாக உள்ளது. மழைகாலங்களில் நிரம்பி வழியும் போது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
இந்த கண்மாய் முறையாக தூர் வாரப்படாமல் இருப்பதால், மழைக் காலங்களில் இந்த கண்மாய்க்கு வரும் தண்ணீர் முழுமையாக சேகரமாகாமல் வைகை ஆற்றில் கலக்கிறது. இந்த கண்மாயை தூர்வாரினால் கடல்போல் தண்ணீர் தேக்கி சுற்றுலாத் தலமாக்கலாம் என கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
கடந்த ஆண்டு ரூ.99 கோடியில் சுற்றுலா திட்டம் செயல்படுத்த பொதுப்பணித் துறையுடன் இணைந்து மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது. அதற்கான முன் தயாரிப்பு பணிகள், அந்த சுற்றுலா மையத்தில் அமையும் பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளிட்டவற்றின் வரைபடங்களையும் மாநகராட்சி வெளியிட்டது. ஆனால், தற்போது வரை திட்டம் நிறை வேற்றப்படாததால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில், பொது மக்களின் கோரிக்கையை ஏற்று முதல்வர் சமீபத்தில் வண்டியூர் கண்மாய் சுற்றுலாத் தலமாக்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி இக்கண்மாயை அழகுபடுத்தி மேம்படுத்தும் திட்டத்துக்கு ரூ. 50 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த திட்டத்தில் கண்மாய் படுகையை பலப்படுத்துதல், படகு சவாரி, கண்மாய் மேற்கு, வடக்கு பகுதி கரையோரம் சைக்கிள் பாதை, நடை பயிற்சி பாதை, யோகா, தியான மையம், சிற்றுண்டி, சிறிய நூலகம், குழந்தைகள், முதியோர், விளையாட்டு உபகரணங்கள், செயற்கை நீரூற்று, ஸ்கேட்டிங் தளம், கராத்தே பயிற்சி மையம், இறகுப்பந்து மைதானம், வாகன நிறுத்துமிடம், நவீன கழிப்பறை, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பூங்காக்கள் உள்ளிட்டவை அமைகிறது.
வண்டியூர் கண்மாயை அழகுபடுத்துவதற்கான பூமி பூஜை வண்டியூர் கண்மாயில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மேயர் இந்திராணி, ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் பிரவீன்குமார், துணை மேயர் நாகராஜன், எம்எல்ஏக்கள் தளபதி, பூமிநாதன், மண்டலத் தலைவர் வாசுகி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இப்பணிகளை மேற்கொள்ளும்போது கண்மாயை ஆழப்படுத்தி அழகுபடுத்த வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மதுரையில் சினிமா தியேட்டர் மற்றுமே பொழுது போக்குவதற்கான இடம் என்று இருந்த நிலை இனி மாறப்போகிறது. மாரியம்மன் தெப்பக்குளத்தில் தினசரியும் மாலை நேரத்தில் மக்கள் கூடி பேசி மகிழ்கின்றனர். வண்டியூர் கண்மாய் அழகுபடுத்தப்பட்டு பூங்கா, படகு சவாரி என சுற்றுலா தலமாக மாற்றப்பட்டால் மதுரைவாசிகளுக்கு மட்டுமல்லாது சுற்றுவட்டார மக்களுக்கும் பொழுதுபோக்கு இடமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது?












Click it and Unblock the Notifications