Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஏஓ -க்களின் பதவி உயர்வு.. சீனியாரிட்டி லிஸ்ட் எங்கே? இத்தனை பாரபட்சம்? கோட்டைக்கு பறந்த புகார்

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழகம் முழுவதும் விஏஓக்களில் பதவி உயர்வு பெற்றோரின் முதுநிலையை மறுநிர்ணயம் செய்ய வேண்டும் என்று தமிழக வருவாய்த்துறை பதவி உயர்வு அலுவலர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கடந்த வருடம் ஜுன் மாதம், தமிழக வருவாய்த் துறை அலுவலர் சங்க மாநிலத் தலைவர் ராமச்சந்திரன், பொதுச்செயலர் ஜெயகணேஷ் ஆகியோர், வி.ஏ.ஓ.,க்களை பாரபட்சமாக நடத்தப்படுவதாக வருவாய்த்துறை நிர்வாக கமிஷனர் மீது குற்றஞ்சாட்டியிருந்தனர்.

VAO

பேட்டி: அப்போது அவர்கள் செய்தியாளர்களுக்கு ஒரு பேட்டியும் தந்திருந்தனர். அதில், "இளநிலை வருவாய் ஆய்வாளர், தட்டச்சர்களின் முதுநிலை பட்டியல் நிர்ணயம் செய்யும்போது, 2015 முதல் 6 ஆண்டுகள் பணி முடித்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும்.

அப்படி தயாரிக்கப்படும் பட்டியல் அந்தந்த கிராம நிர்வாக அலுவலர் பணியில் சேர்ந்த நாளை தகுதியாகக் கொண்டு தான் தயாரிக்க வேண்டும் என்பது தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சட்ட விதிமுறை. ஆனால், அதைக் கண்டு கொள்ளாமல் வி.ஏ.ஓ.,க்களை பாரபட்சமாக நடத்தும் விதமாக வருவாய்த்துறை நிர்வாக கமிஷனர் செயல்படுகிறார்.

பதவி உயர்வு: வி.ஏ.ஓ.,க்கள் பதவி உயர்வில், முதுநிலைப் பட்டியலை, பணியில் சேர்ந்த நாளை கணக்கிட்டு வெளியிட வேண்டும்" என்று கோரிக்கை விடுத்திருந்தனர். அத்துடன் போராட்டத்தையும் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், வருவாய்த்துறை பதவி உயர்வு அலுவலர்கள் சங்கம் மீண்டும் ஒரு கோரிக்கையை விடுத்துள்ளது.. விஏஓக்களில் பதவி உயர்வு பெற்றோரின் முதுநிலையை மறுநிர்ணயம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

நெறிமுறைகள்: இதுகுறித்து மாநில பொதுச்செயலாளர் ஜெயகணேஷ் சொல்லும்போது, "விஏஓக்கள் முதுநிலை ஆய்வாளராக பதவி உயர்வு பெறும்போது அரசின் அனைத்துத்துறை வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. 2001 முதல் பணியேற்பு நாளை அடிப்படையாக கொள்ளாமல் விதிகளுக்கு முரணாக பாரபட்சமாக நிர்ணயம் செய்யப்படுகிறது.

இதில் அனைத்து மாவட்ட வருவாய் நிர்வாகம், வருவாய் நிர்வாக ஆணையரக அதிகாரிகள் தொடர்ந்து இவ்விதமாக செயல்படுகின்றனர். இதனால் விஏஓக்கள் பதவி உயர்விலும், அதனால் பெறும் ஊதியத்திலும் 23 ஆண்டுகளாக பதவி உயர்வு அலுவலர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

அரசுப் பணியாளர் பணிமுதுநிலையை நிர்ணயம் செய்வது தொடர்பாக எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்பது குறித்து மனிதவள மேலாண்மைத்துறை அரசு செயலாளர் கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெளிப்படைத்தன்மை: இதன்படி 10.3.2003 முதல் பணிமுதுநிலையை மறுநிர்ணயம் செய்ய வருவாய் உயரதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். விஏஓக்களில் பதவி உயர்வு பெற்றோரின் முதுநிலையை மறுநிர்ணயம் செய்யவும், வெளிப்படைத்தன்மையுள்ள முதுநிலை பட்டியலை விரைந்து வெளியிடவும் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்... இதுகுறித்து முதல்வர், அமைச்சர்கள், வருவாய்த்துறை செயலரிடம் மனு கொடுத்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+