"அந்த 1 போட்டோ".. அதை விடுங்க.. முஸ்லிம்களை சந்திக்கவே விட்றதில்ல.. திமுக மீது பாயும் வேலூர் இப்ராஹிம்
தடா பெரியசாமியின் வீடு, கார் தாக்கப்பட்டதற்கு வேலூர் இப்ராஹிம் கண்டனம் தெரிவித்துள்ளார்
மதுரை: "தமிழகத்தில் பயங்கரவாதிகளை கைது செய்யாமல், தேசியவாதிகளை கைது செய்கின்றனர்.. . அதனால், பிப்ரவரி 23ம் தேதி மறுபடியும் கோட்டைப்பட்டினம் செல்ல உள்ளேன்.. முஸ்லிம்களை சந்திக்க விடாமல் எங்களை தடுக்கிறார்கள்" என்று பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலுார் இப்ராஹிம் கூறியுள்ளார்.
பாஜக மாநில பட்டியல் அணி தலைவர் தடா பெரியசாமி... இவர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள திருமாந்துறையில் வசித்து வருகிறார்.
2 நாட்களுக்கு முன்பு, இவருக்கு சொந்தமாக கார், அவரது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்தது. இரவு 10.30 மணிக்கு அவர்களது வீட்டிற்கு வந்த சிலர், அங்கு நிறுத்தப்பட்டு இருந்த காரினை கல்லாலும், கட்டையாலும் தாக்கி சேதப்படுத்தியிருக்கிறார்கள்..

கண்ணாடி ஜன்னல்
இதனால், காரின் இடது பக்கம் உள்ள முன் மற்றும் பின் டயர்களை கத்தியால் கிழித்து சேதப்படுத்தி உள்ளனர்.. வீட்டின் மீதும் கல் எறிந்து ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது.. இந்த வன்முறை சம்பவங்களைதான் பாஜக கையில் எடுத்து, திமுக அரசை கேள்வி எழுப்பி கொண்டிருக்கிறது.. மேலும், பாஜக பட்டியலின அணியின் மாநில தலைவர் தடா பெரியசாமியின் வீடு, கார் தாக்கப்பட்டது தொடர்பாக விசிக மீது பகிரங்கமாகவே குற்றம்சாட்டி வருகிறது பாஜக... திமுக தான் தங்களுக்கு எதிராக திருமாவை தூண்டி விடுவதாகவும் கிளப்பி விடப்பட்டு வருகிறது..

யாரிந்த நிரபு
அத்துடன் பெரியசாமி வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதல் விவகாரத்தில், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த விசிக நிர்வாகி நிரபு என்பவருக்கு தொடர்பு இருப்பதாக சொல்லி வருவதுடன், திருமாவளவனுடன் சேர்ந்து நிரபு, எடுத்துக்கொண்ட போட்டோ ஒன்றையும் பாஜகவினர் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியிட்டும் வருகிறார்கள்.. தாக்குதல் சம்பவத்தின் பின்னணி என்ன? இந்த போட்டோவின் உண்மைத்தன்மை என்ன என்பது குறித்தெல்லாம் போலீசார் தீவிரமாக விசாரித்து கொண்டிருக்கிறார்கள் என்றாலும், திமுக அரசு மீது பாஜகவின் குற்றச்சாட்டுகள் நீண்டுகொண்டே வருகின்றன.. அந்தவகையில், பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலுார் இப்ராஹிமும் கண்டனம் தெரிவித்துள்ளார்.. மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது சொன்னதாவது:

திருமாவளவன்
தமிழகத்தில் முக ஸ்டாலின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது... போலீசாருக்கும் பாதுகாப்பில்லை.. திருமாவளவனை விமர்சித்து பேசியதால் பாஜக பட்டியல் அணி மாநில தலைவர் தடா பெரியசாமி வீட்டில் தாக்குதல் நடத்தி, வாகனத்தையும் அடித்து நொறுக்கியுள்ளனர்... ஆனால், இதுதொடர்பாக யாரும் இதுவரை கைதாகவில்லை... செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றிய சிறுபான்மை பிரிவு தலைவர் அமீரை தாக்கியுள்ளனர்.. இப்படி பாஜகவினர் மீது கொலை முயற்சி நடப்பதும், வன்முறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளதும் தொடர்கிறது..

ஜாக்கிரதை
தமிழக அரசை பொறுத்தவரை சிறுபான்மையினருக்கு எதிராக பாஜக உள்ளதாக பிம்பத்தை திட்டமிட்டு ஏற்படுத்துகிறார்கள்.. அத்துடன், அவர்களுக்கு மத்திய அரசின் நலத்திட்டங்களை கொண்டு சேர்க்காமலும் உள்ளனர்.. சிறுபான்மையினருக்கு கல்வி, விளையாட்டு, கடனுதவி என எந்த திட்டத்திற்கும் மத்திய அரசிடம் எதையும் கேட்டு பெறுவதும் கிடையாது.. முஸ்லிம்கள் விழிப்புணர்வு பெறாத வகையில், மதவாதத்துடன் இருக்கும்படியும் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்கின்றனர்.. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் சிறுபான்மை பிரிவு நிர்வாகியை நலம் விசாரிக்க சென்ற என்னையும் கைது செய்தனர்.

வேலூர் இப்ராஹிம்
எனக்கு பாதுகாப்பு அளிக்கவே கைது செய்வதாக, பொய்யான காரணத்தை சொல்கிறார்கள். தமிழகத்தில் பயங்கரவாதிகளை கைது செய்யாமல், தேசியவாதிகளை கைது செய்கின்றனர்.. அதனால், பிப்ரவரி 23-ல் மறுபடியும் கோட்டைப்பட்டினம் செல்ல போகிறேன்,.. முஸ்லிம்களை சந்திக்க விடாமல் எங்களை தடுப்பது ஜனநாயக விரோதம்" என்றார் வேலூர் இப்ராஹிம். இதனிடையே, ராணுவ வீரர் பிரபு நாயக் கொலை, பெரம்பலூர் மாவட்டத்தில் பாஜக பட்டியலின தலைவர் தடா பெரியசாமியின் வீட்டின் மீது தாக்குதல், ஆலந்தூரில் காவலர் கல்லால் அடித்துக்கொலை என்று திமுக ஆட்சியில் நடைபெற்று வரும் தொடர் வன்முறை சம்பவங்களை கண்டிக்கும் விதமாக வரும் 21-ம் தேதி பாஜக சார்பில் உண்ணாவிரத போராட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications