அடேங்கப்பா! முதல்வராக விஜய்.. கூட்டணி கட்சியினர் வாழ்த்தாம்.. பின்னாடி அண்ணாமலையை பார்த்தீங்களா?
மதுரை: போஸ்டர் அடிப்பதில் மதுரைக்காரர்களை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது. அப்படி பரபர போஸ்டர்களுக்கு பெயர்போன மதுரையில் விஜய் ரசிகர்கள் செய்துள்ள லேட்டஸ்ட் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'லியோ' திரைப்படம் இந்த மாதம் வெளியாக இருக்கிறது. விஜய் ரசிகர்கள் இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்காக ஆவலாக காத்திருந்த நேரத்தில் திடீரென ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இசை வெளியீட்டு விழாக்களில் விஜய் சொல்லும் குட்டிக்கதை, அரசியல் பஞ்ச்கள் பரபரப்பைக் கிளப்பும். இச்சூழலில் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சி ரத்தானதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

லியோ ஆடியோ வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதற்கு அரசியல் காரணங்கள் இருக்கலாம் என்கிற ரீதியில் விவாதங்கள் எழுந்து வருகின்றன. ஆடியோ ரத்து அறிவிப்பில் அரசியல் அழுத்தம் ஏதும் இல்லை என தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் தெரிவித்திருந்தது. ஆனாலும், விஜய் ரசிகர்கள், ஆளும் கட்சியை சீண்டும் வகையில் ட்விட்டரில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், மதுரை விஜய் ரசிகர்கள் வித்தியாசமாக யோசித்து ஒரு போஸ்டரை ஒட்டி பரபரப்பைக் கிளப்பியுள்ளனர்.
விஜய் அரசியல் என்ட்ரி தொடர்பாக தீவிரமாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் இந்தச் சூட்டை அதிகப்படுத்தும் விதமாக மதுரையில் போஸ்டர்களை ஒட்டி அதகளம் செய்துள்ளனர் மதுரை தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர். தினத்தந்தி செய்தித்தாள் வடிவில் விஜய் ரசிகர்கள் மதுரையில் ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில் விஜய் தலைமையில் டி.டி.வி.தினகரன், அன்புமணி ராமதாஸ், ஓ.பன்னீர்செல்வம், அண்ணாமலை, ஜான்பாண்டியன் ஆகிய அரசியல் கட்சித் தலைவர்கள் நடிகர் விஜய்க்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கும் வகையில் எடிட் செய்துள்ளனர். கூட்டணி கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர் என்றும் குறுப்பிடப்பட்டுள்ளது.
அதே போல், பிரதமர் மோடி, சட்டமன்றத் தேர்தலில் விஜய் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்ததாகவும். பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளதாகவும், தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி தொண்டர்கள் உற்சாகம் என செய்தி போல சித்தரித்து போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர். இந்த போஸ்டர் மதுரை மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற தகவல் பல மாதங்களாகவே வட்டமடிக்கிறது. நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மாணவர்களுக்கு பரிசு என விஜய்யின் நகர்வுகளும் அதை நோக்கியே இருப்பதாக கூறப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தினரின் செயல்பாடுகள் ஒவ்வொன்றையும் அரசியல் கட்சிகள் கூர்ந்து கவனித்து வருகின்றன.
இந்நிலையில், விஜய் ரசிகர்களின் இந்த போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அதிலும் குறிப்பாக பாஜக, அமமுக, பாமக, ஓபிஎஸ் அணி அதிமுக உள்ளிட்ட கட்சிகளோடு கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்து வெற்றி பெற்று ஆட்சியமைக்கப் போவதாக விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. தங்களது கனவை வெளிப்படுத்தும் விதமாக ரசிகர்கள் ஒட்டியுள்ளனர். ஆனால், கனவா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா?
-
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
“ரூ.5 கோடி கேட்குறாங்க.. இதுதான் நீங்க சொன்ன மாற்றமா விஜய்?” நிர்வாகிகள் கொந்தளிப்பு -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா! -
காத்திருந்து காத்திருந்து! புதுவையில் தவெகவுடன் இணைந்த கூட்டணி! அப்போ அந்த 2 வேட்பாளர்கள் நிலை? -
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
விஜயை வாழ விடுங்க.. திரிஷா என்ன பண்ணுனாங்க? குடும்பம் இருக்கு.. கூல் சுரேஷ் ஆதங்கம் -
புஸ்சி ஆனந்த் ஒழிக.. கோஷமிட்ட தவெக நிர்வாகிகள்.. புதுவையில் போட்டியிட சீட் வழங்காததால் ஆதங்கம் -
விஜய்யை பார்க்க சென்று விபத்தில் சிக்கிய தஞ்சை கல்லூரி மாணவர் விக்னேஷ் 19 நாள் கழித்து உயிரிழப்பு -
கேரளாவில் வீசும் விஜய் அலை? சர்வேயில் வெளியான அதிர்ச்சி தகவல்.. இதை யாருமே எதிர்பார்க்கலையே -
தவெக மாய உலகத்தில் இருக்கிறது.. கிராமப்புறங்களில் காத்து வாங்கும் கட்சி! ஷாக் ரிப்போர்ட் -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ்












Click it and Unblock the Notifications