மதுரை தவெக மாநாட்டில் விஜய் உடைக்கும் சீக்ரெட்! போட்டியிடும் தொகுதி பற்றி அறிவிக்க வாய்ப்பு!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் இன்று தவெக மாநாடு (TVK Maanadu Madurai) நடைபெறுகிறது. மிக பிரமாண்டமாக நடைபெறும் இந்த மாநாட்டில் விஜய் மாலை 6 மணியளவில் பேசுவார் என்று கூறப்படுகிறது. 2026 சட்டசபை தேர்தலையொட்டி விஜய் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப் போவதாக கூறப்படுகிறது. அதாவது தர்மபுரி மாவட்டத்தில் விஜய் போட்டியிடுவார் என்றும் அதில் எந்த தொகுதி எது என்பதை இன்று விஜய் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. திமுக, அதிமுக - பாஜக, நாம் தமிழர் கட்சி மற்றும் புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் தயாராகி வருகின்றன. இதில் முதல் முறையாக களம் காணும் தவெக 1967 மற்றும் 1977இல் நடந்த அரசியல் மாற்றம் போல் வரும் 2026 தேர்தலும் அமையும் என்று கூறி வருகிறார்.

TVK Manadu Vijay Madurai TVK

கொள்கை எதிரி பாஜக என்றும், அரசியல் எதிரி திமுக என்று கூறியும் விஜய் இந்த தேர்தலை சந்திக்கிறார். இதுவரை விஜய் கட்சிக்கு பெரிய கட்சிகள் ஏதும் கூட்டணி வைக்க வரவில்லை. இதனால் விஜய் தன் பலத்தை காண்பிக்க மதுரையில் 2வது மாநாடை நடத்துகிறார். மதுரை பாரபத்தியில் நடக்கும் இந்த மாநாடு முந்தைய விக்கிரவாண்டி மாநாட்டை விட மிக பிரமாண்டமாக நடத்தப்படுகிறது.

மொத்தம் 506 ஏக்க பரப்பளவில் இந்த மாநாடு நடக்கிறது.1.50 லட்சம் இருக்கைகள் போடப்பட்டுள்ள நிலையில் 10 முதல் 15 லட்சம் பேர் வரை இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது. மாநாட்டுக்கான ஏற்பாடுகளும் முழு வீச்சில் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் மாநாட்டில் விஜய் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. கட்சி தொண்டர்கள் மட்டும் இன்று தமிழக அரசியல் கட்சிகளும் விஜய் என்ன பேசுவார் என எதிர்பார்த்து உள்ளனர்.

மாநாட்டில் அரசியல் பேசக்கூடாது என கூறப்பட்டிருக்கும் நிலையில், இந்த மதுரை மாநாட்டில் விஜய் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்றும், 2026 சட்டசபை தேர்தலில் சில தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயரையும் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் விஜய் எங்கு போட்டியிடுவார் என்பதையும் அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விஜய் தர்மபுரி மாவட்டத்தில் போட்டியிட உள்ளதாகவும், அதில் எந்த தொகுதி என்பதையும் இன்று விஜய் அறிவிப்பார் என்றும் சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+